இறங்கி அடிக்கும் சுந்தர்.. 6.7-இன்ச் QHD+ டிஸ்பிளே.. 12GB ரேம் உடன் புது Pixel போன்.. என்ன மாடல்?
கூகுள் பிக்சல் 7 போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கூகுள் பிக்சல் 7 போன்களுக்கு பிறகு கூகுள் பிக்சல் 8 போன்களை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த இரண்டு போன்களும் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தற்போது வெளிவந்த தகவலின்படி, கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும். அதேபோல் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி/256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கூகுள் பிக்சல் 8 ஆனது லைகோரைஸ் (Licorice) மற்றும் பியோனி (Peony)மற்றும் ஹேஸ் (Haze) நிறங்களில் அறிமுகம் செய்யப்படும். பின்பு பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் லைகோரைஸ் (Licorice), ஸ்கை (Sky) நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களின் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த இரண்டு போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.
டிஸ்பிளே: கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.17-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் 2400 x 1080 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் க்யூஎச்டி பிளஸ் (QHD+) எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் 2960 x 1440 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த இரண்டு போன்களும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளன.
சிப்செட்: கூகுள் பிக்சல் 8 மறறும் பிக்சல் 8 ப்ரோ போன்கள் கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனகள் மேம்பட்ட செயல்திறன் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த இரண்டு கூகுள் பிக்சல் போன்களும் வெளிவரும்.
கூகுள் பிக்சல் 8 கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா(Samsung ISOCELL GN2 sensor) + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 11எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ கேமரா: ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization)ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி சென்சார் + 64எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 11எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
பேட்டரி: கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஆனது 4485எம்ஏஎச் பேட்டரி மற்றும் 24 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் வசதி, 12 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4950 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த இரண்டு போன்களும் சற்று உயர்வான விலையில் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யும் சமயத்தில் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு புதிய தயாரிப்புகளை அந்நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








