வெயிட்டிங் லிஸ்ட்டில் கோடி மக்கள்.. தேதி குறிச்சாச்சு.. 12GB ரேம்.. SONY கேமரா.. 4950mAh பேட்டரி.. எந்த மாடல்?
கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8), கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8) மற்றும் கூகுள் பிக்சல் வாட்ச் 2 (Google Pixel Watch 2) ஆகியவற்றின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): இந்த போன் 6.17 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் வருகிறது. அதோடு டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, சாம்சங் (Samsung GN2) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்386 ( Sony IMX386) சென்சாருடன் கூடிய 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. அதேபோல சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சாருடன் கூடிய 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த 2 கேமராக்களும் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டது. இந்த கூகுள் போனில் 12W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,485mAh பேட்டரி வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் பிளாக் (Black), யெல்லோ (Yellow), லைட் ப்ளூ (Light Blue) ஆகிய 3 கலர்களில் வெளியாக இருக்கிறது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 8 Pro Specifications): இந்த போன் 6.7 இன்ச் (2,992 x 1,344 பிக்சல்கள்) க்யூஎச்டிபிளஸ் (QHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
அதேபோல கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட கூகுள் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் சாம்சங் ஜிஎன்2 சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்787 சென்சாருடன் கூடிய 64 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 48 எம்பி டெப்த் கேமரா வருகிறது. சாம்சங் சென்சாருடன் கூடிய 10.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,950mAh பேட்டரி வருகிறது.
இந்த போன் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த கூகுள் பிக்சல் மாடல் பிளாக் (Black), வைட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் வெளியாகிறது.
கூகுள் பிக்சல் வாட்ச் 2 அம்சங்கள் (Google Pixel Watch 2 Specifications): இந்த வாட்ச் 1.2 இன்ச் (383×384 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. வியர் ஓஎஸ் 4 (Wear OS 4) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் டபுள்யூ5 ஜென் 1 (Qualcomm Snapdragon W5 Gen 1) சிப்செட் வருகிறது.
2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பிளட் ஆக்ஸிஜன் சென்சார், மல்டிபர்பஸ் எலக்ட்ரிகல் சென்சார், ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார் வருகின்றன. ப்ளூடூத் காலிங், எல்இடி (LTE) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 306mAh பேட்டரி வருகிறது.
இந்த மூன்று ப்ராடக்ட்களும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நியூ யார்க் சிட்டியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு அறிமுகமாகின்றன. அதன்பின் பின்பு கூகுள் ஸ்டோர் வெட்சைட்களில் அந்த போன்களின் விலை மற்றும் அதிகாரப்பூர்வ அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications








