விட்றாதீங்க.. ரூ.21,000 விலை குறைப்பு.. Google Pixel 9 அறிமுகத்திற்கு முன்பாக Pixel 8 மீது மெகா டிஸ்கவுண்ட்!
கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான பிக்சல் 9 (Pixel 9) மாடல் இன்று (ஆகஸ்ட் 13) இரவு உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், சற்றே பழைய பிக்சல் 8 (Pixel 8) மீது மெகா டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை எதன் வழியாக கிடைக்கிறது? இந்தியாவில் அறிமுகமான போது கூகுள் பிக்சல் 8-ன் விலை நிர்ணயம் என்னவாக இருந்தது? தற்போதைய ஆபர் விலை என்ன? பிக்சல் 8 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? புதிய பிக்சல் 9 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:
கூகுள் பிக்சல் 8 மீதான மெகா டிஸ்கவுண்ட்: கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் போது, கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.75,999 ஆக இருந்தது. தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் இது ரூ.17,000 நேரடி தள்ளுபடிக்கு பின்னர் ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது தவிர ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக ரூ.4000 தள்ளுபடியும் கிடைக்கும்.

இதன் மூலம் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.54,999 க்கு கொண்டுவர முடியும். அதாவது முழுதாக ரூ.21,000 என்கிற மெகா டிஸ்கவுன்ட்டை பெற முடியும். ஒருவேளை உங்களிடம் "நல்ல நிலையில் உள்ள" பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், அதை நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பினால்.. உங்களுக்கு ரூ.54,150 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.
பிக்சல் 8 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? பிக்சல் 9 சீரீஸ் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் பழைய பிக்சல் 8 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் எழுவது சகஜமே. ஆனால் எங்களுடைய பதில் என்னவென்றால் - கண்டிப்பாக நம்பி வாங்கலாம். ஏனென்றால் இது தனித்துவமான ஹாரிசாண்டல் கேமரா யூனிட், நேர்த்தியான லைட் வெயிட் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.
மேலும் இது 2400 x 1080 ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், அனைத்து பக்கங்களிலும் குறைந்தபட்ச பெஸல்கள், பிரகாசமான சூரிய ஒளியில் கூட நல்ல ப்ரைட்னஸை வழங்கும் 6.2 இன்ச் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. கூடவே இது கூகுளின் டென்சர் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. தினசரி பயன்பாடு, கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் என எதிலுமே குறை வைக்காத பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது
கேமராக்களை பொறுத்தவரை, இது விதிவிலக்கான கேமரா குவாலிட்டியை வழங்குகிறது. இது 50எம்பி மெயின் கேமராவானது பல்வேறு ஒளி நிலைகளில் சிறந்த அவுட்புட்களை வழங்குகிறது. இதன் புதிய மேக்ரோ ஃபோகஸ் அம்சம் க்ளோஸ்-அப் புகைப்படங்களை இன்னும் எளிதாக்குகிறது. கடைசியாக - இப்போதும் கூட இது ஒரு முழுமையான ஆண்ட்ராய்டு போன் ஆகும். ரூ.21,000 என்கிற மெகா டிஸ்கவுண்ட்டின் கீழ், இதை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.
புதிய கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வெண்ணிலா வேரியண்ட் ஆன பிக்சல் 9 (Pixel 9) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.75,500 க்கும், ப்ரோ வேரியண்ட் ஆன பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro) மாடல் ஆனது ரூ.84,000 க்கும், பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) மாடல் ஆனது சுமார் ரூ .1,01,00 க்கும், கடைசியாக உள்ள பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,50,600 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








