Home
Mobile

சுந்தர் பிச்சை ஆட்டம் ஸ்டார்ட்.. Pixel 8, Pixel 8 Pro இந்திய விற்பனை ஆரம்பம்.. நம்பி வாங்க 5 காரணங்கள்!

கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 8 சீரீஸின் கீழ் அறிமுகமான பிக்சல் 8 (Pixel 8) மற்றும் பிக்சல் 8 ப்ரோ (Pixel 8 Pro) ஆகிய இரண்டுமே இன்று முதல் (அக்டோபர் 12) இந்திய விற்பனையை தொடங்குகின்றன.

இவ்விரு கூகுள் போன்களையும் நம்பி வாங்கலாமா, வேண்டாமா என்கிற சந்தேகம் உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோவை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 5 காரணங்கள் இதோ:

Pixel 8, Pixel 8 Pro விற்பனை ஆரம்பம்.. நம்பி வாங்க 5 காரணங்கள்!

பிக்சல் 8 விலை மற்றும் அறிமுக சலுகைகள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் (128ஜிபி) ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,999 க்கும், ஹை-எண்ட் ஸ்டோரேஜ் (256ஜிபி) ஆப்ஷன் ரூ.82,999 க்கும் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் ஐசிஐசிஐ பேங்க், கோடக் பேங்க் அல்லது ஆக்சிஸ் பேங்க் கார்டுகளுக்கு ரூ.8,000 தள்ளுபடி கிடைக்கிறது.

பிக்சல் 8 ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 5 காரணங்கள்: முதல் காரணம் - பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் டிசைன்! தனித்துவமான ஹாரிசாண்டல் கேமரா யூனிட், க்ளீன் ஆன பேனல் என இது மிகவும் நேர்த்தியான, இலகுரக வடிவமைப்பையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பையும், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையம் கொண்டுள்ளது.

இரண்டாவது காரணம் - பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே! இது 2400 x 1080 ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் குறைந்தபட்ச பெஸல்கள், பிரகாசமான சூரிய ஒளியில் கூட நல்ல ப்ரைட்னஸை வழங்கும் 6.2 இன்ச் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

மூன்றாவது காரணம் 03 - பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் டென்சர் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. தினசரி பயன்பாடு, கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் என எதிலுமே குறை வைக்காத பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. இதன் பேட்டரி வயர்லெஸ் சார்ஜிங் கூடவே
27W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது சுமார் 1.5 மணி நேரத்தில் பிக்சல் 8-ஐ முழுமையாக சார்ஜ் செய்கிறது.

நான்காவது காரணம் - பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் கேமரா: இது விதிவிலக்கான கேமரா குவாலிட்டியை வழங்குகிறது. இது 50எம்பி மெயின் கேமராவானது பல்வேறு ஒளி நிலைகளில் சிறந்த அவுட்புட்களை வழங்குகிறது.இதன் புதிய மேக்ரோ ஃபோகஸ் அம்சம் நெருக்கமான புகைப்படங்களை இன்னும் எளிதாக்குகிறது.

ஐந்தாவது காரணம் - பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ஒரு முழுமையான ஆண்ட்ராய்டு போன் ஆகும்: ஒட்டுமொத்தமாக, பிக்சல் 8 ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த விலை வரம்பில் வாங்க கிடைக்கும் சிறந்த பிரீமியம் ஆண்ட்ராய்டு போன் ஆகும். அட்டகாசமான கேமரா, நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு அனுபவம் என, சந்தேகத்திற்கு இடமின்றி இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!

பிக்சல் 8 ப்ரோ விலை மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் (12ஜிபி ரேம் + 128ஜிபி) ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.106,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது அப்சிடியன் (பிளாக்) மற்றும் பே (சோர்ட்டா ப்ளூ) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

பிக்சல் 8 ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 5 காரணங்கள்: முதல் காரணம் - பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாறுபட்ட வடிவமைப்பு: ரியர் கவர் முழுவதுமான, சற்று தடிமனான ஹாரிசாண்டல் கேமரா யூனிட், பெரிஸ்கோப் லென்ஸ் உட்பட மூன்று கேமராக்கள் என வரவேற்கத்தக்க மாற்றத்தை பெற்றுள்ளது.

இரண்டாவது காரணம் - அனைத்தை விடவும் பிரகாசமான டிஸ்பிளே. இதன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவானது 2400 நிட்ஸ் வரை பிரைட்னஸை வழங்குகிறது. இது "கண்மூடித்தனமான" ப்ரைட்னஸை வழங்குகிறது. வலுவான சூரிய வெயிலின் கீழே கூட பிக்சல் 8 ப்ரோவின் டிஸ்பிளே தெளிவாக இருக்கிறது மற்றும் தெளிவான வண்ணங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் காட்டுகிறது.

மூன்றாவது காரணம் - கில்லர் கேமராக்கள் மற்றும் சில கூலான ஏஐ அம்சங்கள்: சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. நான்காவது காரணம்: இது தனித்துவமான வெப்பநிலை சென்சார் உடன் வருகிறது. ஐந்தாவது காரணம் - இதுவொரு முழுமையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 8 and Pixel 8 Pro India Sale Started From October 12 Check 5 Reasons to Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X