சாரே கொல மாஸ்! கெத்தாக இந்தியாவுக்கு வந்த Google நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்.! என்ன விலை?
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை போலவே கூகுள் நிறுவனமும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் புதிய கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மாரட்போன் அருமையான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது. சரி இப்போது இந்த புதிய கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர், ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே அம்சம், எச்டிஆர் அம்சம், ஹை ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன்.
இந்த பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் கூகுள் டென்சர் ஜி2 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்.

நைட் சைட், லாங் எக்ஸ்போஷர், ரியல் டோன், ஃபேஸ் அன்ப்ளர், பனோரமா, மேனுவல் ஒயிட் பேலன்சிங், டாப் ஷாட், போர்ட்ரெய்ட் மோட், சூப்பர் ரெஸ் ஜூம், போட்டோ அன்ப்ளர் போன்ற பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் ஆதரவும் கொண்டுள்ளது இந்த புதிய கூகுள் ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு இந்த புத்தம் புதிய கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனுக்கு ஐந்து வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்,என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி67 சான்றிதழ் பெற்றிருக்கிறது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியும் இதில் உள்ளது.

இதுதவிர ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோஃபோன்கள் ஆதரவைக் கொண்டுள்ளது கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன். குறிப்பாக சர்கோல், Sea, ஸ்னோவ் நிறங்களில் இந்த புதிய போன் கிடைக்கும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கூகுள் பிக்சல் 7ஏ போனின் விலை ரூ.43,999-ஆக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மே 11-ம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர பல்வேறு சிறப்பு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








