அறிமுகமானது Google Pixel 7 series: பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க.. லுக் இருக்கே! அடடா..

|

ஆப்பிளின் ஐபோன்கள் போன்று தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றுதான் கூகுள் பிக்சல். இந்த போன்களில் பாதுகாப்பு ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு கசிவுத் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில் கூகுள் பிக்சல் 7 சீரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி உள்ளது. பிக்சல் 7 சீரிஸ் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

பிரத்யேக சிப்செட் ஆதரவு..

பிரத்யேக சிப்செட் ஆதரவு..

கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 7 சீரிஸ் இல் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு மாடல்களிலும் கூகுளின் சொந்த தயாரிப்பான டென்சர் ஜி2 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.இது செகண்ட் ஜென் சிப்செட் ஆகும்.பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும், அதிவேக செயல்திறனையும் இந்த சிப்செட் வழங்கும்.

பிக்சல் 7 சீரிஸ் கேமரா விவரங்கள்

பிக்சல் 7 சீரிஸ் கேமரா விவரங்கள்

பிக்சல் 7 மாடலில் டூயல் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா ஆகும்.

பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அது 50 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 48 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் ஆகும்.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 10.8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

5 வருட பாதுகாப்பு அப்டேட்

5 வருட பாதுகாப்பு அப்டேட்

இந்த ஸ்மார்ட்போன்கள் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவை உறுதி செய்யும் வகையில் IP68 மதிப்பீட்டைப் பெற்றிருக்கிறது.

பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Pixel 7, Pixel 7 Pro விலை

Google Pixel 7, Pixel 7 Pro விலை

Google Pixel 7, Pixel 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை குறித்து பார்க்கையில், பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடல் ஆனது ஸ்னோ, அப்சிடியன் மற்றும் லெமன்கிராஸ் ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

அதேபோல் பிக்சல் 7 ப்ரோ ஆனது ரூ.84,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹேசல் அப்சிடியன் மற்றும் ஸ்னோ வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

பிக்சல் 7 மாடலுக்கு ரூ.6000 மற்றும் பிக்சல் 7 ப்ரோவிற்கு ரூ.8500 கேஷ்பேக் சலுகையும் உண்டு.

கூகுள் பிக்சல் 7 சிறப்பம்சங்கள்

கூகுள் பிக்சல் 7 சிறப்பம்சங்கள்

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இயங்குகிறது.

இதில் 6.32 இன்ச் முழு எச்டி+ OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் ஆதரவுடனான ஆக்டோ கோர் டென்சர் ஜி2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

72 மணிநேர பேட்டரி ஆயுள்..

72 மணிநேர பேட்டரி ஆயுள்..

5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. பயோமெட்ரிக் ஆதரவுக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இதில் இருக்கிறது. ஃபேஸ் அன்லாக் ஆதரவு வழங்கப்படவில்லை.

பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

அதேபோல் கூகுளின் எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையில் 72 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Google Pixel 7 Pro சிறப்பம்சங்கள்

Google Pixel 7 Pro சிறப்பம்சங்கள்

Google Pixel 7 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

பிக்சல் 7 மாடலில் இருக்கும் அதே டென்சர் ஜி2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடல் 12 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.7-இன்ச் குவாட்-எச்டி LTPO OLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர்

எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர்

5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. பயோமெட்ரிக் ஆதரவுக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது.இதிலும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு வழங்கப்படவில்லை.

பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வேகமான வயர்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது. அதே எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறை இதிலும் வழங்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட கேமரா அம்சங்கள்

பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனிலும் ஒரே சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும் டிஸ்ப்ளே அளவு மாறுபட்டதாக இருக்கிறது.

அதேபோல் கேமரா ஆதரவும் பிக்சல் 7ஐ விட 7 ப்ரோவில் மேம்பட்டு இருக்கிறது.

பிக்சல் 7 மாடலில் டூயல் கேமராக்களும் பிக்சல் 7 ப்ரோவில் டிரிபிள் கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ப்ரோ மாடலில் நிறுவனத்தின் புதிய மேக்ரோ ஃபோகஸ் ஆதரவுடன் பல்வேறு மேம்பட்ட கேமரா அம்சங்களை நிறுவனம் வழங்கி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel 7 series Launched in india With Amazing Look and Specs: Sale Date and Offer Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X