Home
Mobile

அடேங்கப்பா ஆஃபர்.. ரூ.14000 விலை குறைப்பு.. இதுவரை இல்லாத கம்மி விலைக்கு விற்பனையாகும் Google போன்!

ஒரு மாதத்திற்கு 30 - 40 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட, அவைகளில் எதுவுமே கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் போன்களின் (Pixel Phones) அளவிற்கு மிகவும் மேம்படுத்தப்பட்ட, சுத்தமான மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸை (Android Experience) வழங்காது.

இந்த ஒரு காரணத்திற்காகவே பிக்சல் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் அல்லது ஆசை உங்களிடம் இருந்தால், அதை செய்வதற்கு இதுவே சிறந்த நேரமாகும். ஏனென்றால் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) லேட்டஸ்ட் பிக்சல் ஸ்மார்ட்போன் ஒன்றானது ரூ.14,000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை இல்லாத கம்மி விலைக்கு விற்பனையாகும் Google போன்!

ஈர்க்கக்கூடிய ஆண்ட்ராய்டு அம்சங்கள் மற்றும் போட்டோகிராஃபி திறன்களை (Photography Cababilities) வழங்கும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ (Google Pixel 7 Pro) ஸ்மார்ட்போன் ஆனது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது இது 16% தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை (Original Price) ரூ. 84,999 ஆகும். இது 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (12GB RAM + 128GB Storage) ஆப்ஷனின் விலையாகும். தற்போது இது பிளிப்கார்ட் வழியாக 16% நேரடி தள்ளுபடி (Initial Discount) உடன் ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது மட்டுமல்ல கூகுள் பிக்சல் 7 ப்ரோ மீது எக்ஸ்சேஞ்ச் மற்றும் பேங்க் ஆஃபரும் (Exchange and Bank Offer) கிடைக்கிறது. எல்லா சலுகைகளையும் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் பிக்சல் 7 ப்ரோ மாடலின் இறுதி ஆஃபர் விலையை (Final Offer Price) இன்னும் குறைக்க முடியும்.

எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 7 ப்ரோவை வாங்குவதற்காக உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யும் போது, உங்களுக்கு ரூ.65,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் இறுதிக்கட்ட எக்ஸ்சேன்ஜ் போனஸ் (Final Exchange Bonus) ஆனது நீங்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்மார்ட்போனின் மாடல் (Model) மற்றும் அது வேலை செய்யும் நிலையை (Working Condition) பொறுத்து வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இறுதிக்கட்ட எக்ஸ்சேன்ஜ் போனஸ் எல்லாம் ஒருபக்கம் இருக்க, முதலில் நீங்கள் வசிக்கும் பகுதியில் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் கிடைக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளவும். இதை கண்டுபிடிக்க, பிளிப்கார்ட்டில் உங்கள் பின் கோட்-ஐ (PIN Code) உள்ளிடவும். வங்கி சலுகையை பொறுத்தவரை, ஏயு பேங்க் கிரெடிட் கார்டை (AU Bank Credit Card) பயன்படுத்தினால் 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

ரூ.69,999 என்கிற ஆஃபர் விலையில் கூகுள் பிக்சல் 7 ப்ரோவை நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக வாங்கலாம். ஏனென்றால் பிக்சல் 7 ப்ரோவானது தற்போது சந்தையில் வாங்க கிடைக்கும் மிகசிறந்த கேமரா போன்களில் (Best Camera Phone) ஒன்றாகும். இதை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி கேமரா + 12 எம்பி கேமராக்கள் உள்ளன.

மேலும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கூகுளின் சொந்த சிப்செட் ஆன டென்சர் ஜி2 (Tensor G2 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. இது சக்திவாய்ந்த செயல்திறனை உறுதி செய்கிறது. கூடவே இது மேம்பட்ட ஆண்ட்ராய்டு அனுபவத்தையும் உறுதி செய்கிறது. அறியாதோர்களுக்கு, மற்ற ஆண்ட்ராய்டு போன்களில் இல்லாத அல்லது வந்து சேராத ஆண்ட்ராய்டு அம்சங்களை வழங்குவதில் பிக்சல் போன்கள் பெயர் போன மாடல்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 7 Pro gets Rs 14000 Discount on Flipkart Exchange and Bank Offer Also Available
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X