Home
Mobile

பாதிக்கு பாதி விலை.. 2 Google Pixel போன்கள் மீது 47% டிஸ்கவுண்ட்.. Flipkart Flagship Sale-ன் உச்சக்கட்ட ஆபர்!

கூகுள் (Google) நிறுவனத்தின் அடுத்த பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களான கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) மற்றும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ (Google Pixel 9 Pro) மாடல்கள் ஆனது வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடக்கும் கூகுள் ஈவென்ட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், சற்றே பழைய பிக்சல் 7 (Pixel 7) மற்றும் பிக்சல் 7 ப்ரோ (Pixel 7 Pro) ஸ்மார்ட்போன்களின் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்சல் 7 சீரீஸ் மாடல்களின் மீது எவ்வளவு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) தான் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7ப்ரோ ஆகிய இரண்டுமே தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. தற்போது பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.59,999 க்கு பதிலாக 45% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.84,999 க்கு பதிலாக 47% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது.

பாதிக்கு பாதி விலை.. 2 Google Pixel போன்கள் மீது 47% டிஸ்கவுண்ட்!

கூகுளின் பிரீமியம் ஸ்மார்ட்போனாக பிக்சல் 9 ப்ரோ மாடலே இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பழைய பிக்சல் 7 ப்ரோவை நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக! ஒரு ப்ரீமியம் லெவல், பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை தேடும் எவருக்குமே - பிளிப்கார்ட் வலைத்தளத்தில் கிடைக்கும் இந்த ஆபர் - மிகவும் லாபகரமான ஒரு டீல் ஆக இருக்கும்.

ஏனென்றால், கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஓஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே, ஒரு பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரி, டென்சர் ஜி2 சிப்செட் மற்றும் 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா சென்சார் போன்ற உயர்தர அம்சங்கள் மற்றும் ஹார்ட்வேரை கொண்ட மிகவும் திறமையான ஸ்மாட்போன் ஆகும்.

மேலும் கூகுள் பிக்சல் 7 ப்ரோவுடன் கிடைக்கும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்கின் ஆனது மற்ற ஸ்கின்களுக்கு அருகில் கூட வராது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எல்டிபிஓ க்யூஎச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளாது. முன்னரே குறிப்பிட்டபடி இது டென்சர் ஜி2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை. ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் எல்டிஏஎஃப் உடனான 48எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் + 50எம்பி ப்ரைமரி வைட் ஆங்கிள் ஷூட்டர் + 12எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 11எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனான ஒரு பெரிய 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

பிளிப்கார்ட் பிளாக்ஷிப் சேல் (Flipkart Flagship Sale) வழியாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய ஆபர்கள் கிடைக்கிறது ? ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (Apple iPhone 14 Plus) மாடலானது, பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் ரூ.53,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.38,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. மோட்டோ எட்ஜ் 50 ஃப்யூஷன் (Moto Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் ஆனது, பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் ரூ.21,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

மேலும் போக்கோ எப்6 (Poco F6) ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.25,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதேபோல ஒப்போ பைண்ட் என்3 பிளிப் (Oppo Find N3 Flip) ஸ்மார்ட்போன் ஆனது எப்போதும் இல்லாத குறைந்த விலையான ரூ.53,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடல் ஆனது தள்ளுபடி விலையான ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ரூ.31,249 க்கும் மற்றும் ரெட்மி 13சி ரூ.10,499 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 7 and Pixel 7 Pro gets Price cut in India Ahead Google Pixel 9 Series Launch on Aug 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X