Google பயனர்களுக்கு குட் நியூஸ்: ஒரு தடவ முடிவு பண்ணிட்டா., திரும்ப வரவே முடியாது!

|

Google Pixel 6a, Pixel 4a ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் Android 13 ஓஎஸ் அப்டேட்டை பெற்றிருக்கிறது. இந்த புதுப்பிப்பின் மூலம் பயனர்கள் புதிய அம்சங்கள், மேம்பாடுகள் மற்றும் டிஸ்ப்ளே காட்சி புதுப்பிப்புகளை பெறலாம்.

புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்

புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்

ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை கூகுள் அறிவித்தது.

இந்த அப்டேட் தற்போது இந்திய பிக்சல் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த அப்டேட்களானது பல புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகளுடன் சில காட்சி புதுப்பிப்புகளையும் வழங்குகிறது.

டென்சர் SoC மற்றும் டூயல் பின்புற கேமரா

டென்சர் SoC மற்றும் டூயல் பின்புற கேமரா

இந்தியாவில் Pixel 4a ஸ்மார்ட்போன்கள் முன்னதாகவே விற்பனைக்கு கிடைத்து வருகிறது. சமீபத்தில் Pixel 6a ஆனது டென்சர் SoC ஆதரவு மற்றும் டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வெளியானது. Pixel ஸ்மார்ட்போன்களின் அப்டேட் குறித்த தகவல் Gadgets 360 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ மாடல்கள் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆனது ஸ்மார்ட்போன் மாடல்களை பொறுத்து மாறுபடுகிறது,

அதாவது பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனுக்கான புதுப்பிப்பு 855 எம்பி ஆகவும் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கான புதுப்பிப்பு 1.06 ஜிபி ஆகவும் இருக்கிறது. பிக்சல் 6 ப்ரோ-க்கான ஆண்ட்ராய்டு 13 அப்டேட் சுமார் 1.25 ஜிபி ஆகும்.

அப்டேட் செய்வது எப்படி?

அப்டேட் செய்வது எப்படி?

இந்த அப்டேட் சில பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் கிடைக்கிறது. நோட்டிபிகேஷன் கிடைக்காத பயனர்கள், செட்டிங்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று சாஃப்வேர் வெர்ஷன் என்ற தேர்வை கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஒரு முறை முடிவு பண்ணிட்டா., பேக் வரவே முடியாது

ஒரு முறை முடிவு பண்ணிட்டா., பேக் வரவே முடியாது

Pixel 6a பயனர்களுக்கான குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நீங்கள் ஒருமுறை ஆண்ட்ராய்டு 13 அப்டேட் செய்து விட்டால் அவ்வளவு தான்.

அதாவது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் செய்து இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆண்ட்ராய்டு 12-க்கு மீண்டும் மாற முடியாது. காரணம் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில் பூட் லோடரும் புதுப்பிக்கப்படுகிறது.

ஆனால் Pixel 4a பயனர்கள் மீண்டும் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டுக்கு திரும்ப முடியும்.

ஆண்ட்ராய்டு 13 அம்சங்கள்

ஆண்ட்ராய்டு 13 அம்சங்கள்

செயல்திறன் மேம்பாடுகள், பிழை திருத்தங்கள் மற்றும் புதிய அம்சங்கள் என பல அப்டேட்கள் ஆண்ட்ராய்டு 13 இல் கிடைக்கிறது.

ஆல்பம் தலைப்புடன் புதுப்பிக்கப்பட்ட மீடியா ப்ளேயர்கள், ஆப்ஸ் ஐகான்கள், நோட்டிபிகேஷன் மீதான கூடுதல் கட்டுப்பாடு, புதிய ப்ளேபேக் பார், ஒவ்வொரு பயன்பாடுகளுக்கும் வெவ்வேறு மொழிகள் ஒதுக்கும் திறன் என பல மேம்பாடுகள் இந்த அப்டேட்டில் கிடைக்கிறது.

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அம்சம்ங்கள்

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அம்சம்ங்கள்

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை கொண்டிருக்கிறது.

இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி உள்ளது. போர்ட்ரெய்ட் லைட் அம்சமும், எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையும் இதில் உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 48 மணி நேரம் வரை நீடிக்கும்.

Google பிக்சல் 6ஏ அம்சங்கள்

Google பிக்சல் 6ஏ அம்சங்கள்

Google பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும்.

இதன் இந்திய விலை ரூ.43,999 என அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது இன்-ஹவுஸ் டென்சர் சிப் மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு என்பதற்கு ஆதாரமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel 6a, Pixel 4a Gets Android 13 OS Update in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X