Home
Mobile

சைனீஸ் ஸ்டைலில் Google பார்த்த வேலை.. முழுசா ரூ.16,000.. புதுசு வந்ததும் பழசு மேல அபார விலைக்குறைப்பு!

மே 10 ஆம் தேதி நடக்கும் கூகுள் ஐ/ஓ 2023 (Google I/O 2023) நிகழ்வின் போது, கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக பிக்சல் 7ஏ (Pixel 7a) உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளாது. இது மே 11 ஆம் தேதியன்று இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்.. "புது மாடல் அறிமுகமாகும் முன் பழைய மாடலின் விலையை தாறுமாறாக குறைக்கும்" சீன மொபைல் நிறுவனங்களின் வியாபார யுக்தியை கூகுளும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் "முன்னோடியான" பிக்சல் 6ஏ (Pixel 6a) மீது பெரும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள்ளது.

முழுசா ரூ.16,000.. Google Pixel 6a மீது அபார விலைக்குறைப்பு!

தற்போது பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் 36% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது எந்த வகையான வங்கி சலுகையையும், எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் பயன்படுத்தாமலே இதை ரூ.43,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்கலாம் என்று அர்த்தம்!

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரூ.27,999 என்கிற ஆஃபர் விலையை உங்களால் இன்னும் குறைக்க முடியும். அதற்கு நீங்கள் பிளிப்கார்ட் வழங்கும் எக்ஸ்சேன்ஜ் சலுகையை (Exchange Offer) பயன்படுத்த வேண்டும். நல்ல நிலையில் உள்ள பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.26,750 வரையிலான எஸ்கேசேன்ஜ் போனஸ் கிடைக்கும்.

ஆக நேரடி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆகிய இரண்டையும் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் இறுதி விலையை (Final Price) ரூ.2000 க்குள் கொண்டுவர முடியம். ஒருவேளை நீங்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தப்போவதில்லை என்றால் வங்கி சலுகைகளை பயன்படுத்தி பிக்சல் 6ஏ-வின் விலையை குறைக்கலாம்.

நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை வாங்கினால் 10 சதவீத உடனடி தள்ளுபடி (Instant discount) கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட்டை பயன்படுத்தினால் 5 சதவீதம் கேஷ்பேக் (Cashback) கிடைக்கும்.

அம்சங்களை பொறுத்தவரை, பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது 82.21% என்கிற ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ உடனான 6.1-இன்ச் அளவிலான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பெஸல்லெஸ் டிஸைனுடன் வரும் இந்த டிஸ்பிளேவின் மேல் மையத்தில் செல்பீ கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் டிசைனும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 12.2எம்பி ப்ரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் எல்இடி ஃபிளாஷ் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் எக்ஸ்மோர்-ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார், ஆட்டோஃபோகஸ், கன்ட்டினியூஸ் ஷூட்டிங் , எச்டிஆர் மோட் மற்றும் டிஜிட்டல் ஜூம் போன்ற அம்சங்களும் அடக்கம். முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது கூகுள் டென்சர் ப்ராசஸர் (Google Tensor processor) மற்றும் மாலி-ஜி78 எம்பி20 ஜிபியு மூலம் இயக்கப்படுகிறது. இதன் போனின் ப்ராசஸிங் (Processing) ஆனது கார்டெக்ஸ் எக்ஸ்1, கார்டெக்ஸ் ஏ76 மற்றும் கார்டெக்ஸ் ஏ55 கட்டமைப்பை கொண்ட ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கடைசியாக இது 4410mAh திறன் கொண்ட லி-அயன் பேட்டரியை கொண்டுள்ளது. அது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான (Fast Charging Technology ) ஆதரவுடன் வருகிறது. புதிதாக அறிமுகமாகும் பிக்சல் 7ஏ மாடலை பொறுத்தவரை, இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.42,000 - ரூ.50,000 க்குள் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 6a Gets 36 Percent Discount Price Cut Before Pixel 7a Launch in India on May 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X