Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!

அண்மையில் சீன டிப்ஸ்டர் Bald Panda வெளியிட்ட தகவலின்படி கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ சாதனங்கள் வரும் செப்டம்பர் 13 அன்று அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். குறிப்பாக அனைத்து நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இந்த கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.

விரைவில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் இந்த புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்கள் டூயல் டோன் வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம். குறிப்பாக இந்த சாதனங்களின் பேக் பேனலில் பல சென்சார்களை கொண்ட கேமரா அமைப்பு இடம்பெறலாம். மேலும் கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ சாதனங்கள் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது இந்த பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது 6.4-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக
5ஜி ஆதரவு கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் மாடல்.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இந்த பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்பிளே வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விரைவில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ஆனால் விரைவில் ஆண்ட்ராய்டு 12
அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 4680 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி 3.1 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

மேலும் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை விட கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனங்கள் இந்தியாவிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 6, Pixel 6 Pro May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X