Home
Mobile

சொந்தமாக உருவாக்கும் கூகுள்: பிக்சல் 6 சாதனத்தில் காத்திருக்கும் டுவிஸ்ட்!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சாதனம் நிறுவனத்தின் சொந்த ஜிஎஸ் 101 வைட் சேப்பல் எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங்கின் ஒயிட் சேப்பல் என்ற தனிப்பயன் எஸ்ஓசி குறியீட்டு பெயரில் இது செயல்படுவதாக கூறப்படுகிறது.

கூகுளின் சொந்த ஜிஎஸ் 101 வைட் சேப்பல்

கூகுளின் சொந்த ஜிஎஸ் 101 வைட் சேப்பல்

பிக்சல் 6 கூகுளின் சொந்த ஜிஎஸ் 101 வைட் சேப்பல் எஸ்ஓசி மூலம் இயங்கக்கூடும் என தனியார் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த புதிய எஸ்ஓசி மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் பிக்சல் 6 ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் உதவியுடன் கூகுள் நிறுவனம் அதன் சொந்த செயலியான வைட் சேப்பல் என்ற குறியீட்டு பெயரை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்த வெளியான புதிய அறிக்கையானது கூகுள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறையான பிக்சல் 6 நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவின் முதல் சாதனமாக இது இருக்கும் என தெரிகிறது. பிக்சல் ஸ்மார்ட்போனை போல் கூகுள் நிறுவனத்தின் க்ரோம்புக்களிலும் தனது சொந்த எஸ்ஓசி-களை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்பயன் ஜிஎஸ் 101 வைட் சேப்பல் எஸ்ஓசி

தனிப்பயன் ஜிஎஸ் 101 வைட் சேப்பல் எஸ்ஓசி

பிக்சல் 6 நிறுவனத்தின் தனிப்பயன் ஜிஎஸ் 101 வைட் சேப்பல் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். பிக்சல் 6 மூலம் இயக்கப்படும் இந்த முதல் சிப்செட் வைட் சேப்பல் என பெயரிடப்படும் என வதந்திகள் பரவினாலும், கூகுள் வணிக ரீதியாக இது முற்றிலும் மாறுபடும் என தெரிகிறது.

எக்ஸினோஸ் செயலிகள்

எக்ஸினோஸ் செயலிகள்

9டூ5 கூகுள் அறிக்கையின்படி கூகுள் ஆவணங்களில் இந்த சிப்செட் ஜிஎஸ் 101 என குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுள் தனது சொந்த எக்ஸினோஸ் செயலிகளை சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து வைட் சேப்பல் எஸ்ஓசி-ஐ உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய கூகுள் சிலிக்கான் மென்பொருள் உடன் எக்ஸினோஸின் சில பொதுவான தன்மைகளை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மையத்தில் கட்அவுட் துளை பஞ்ச் டிஸ்ப்ளே

மையத்தில் கட்அவுட் துளை பஞ்ச் டிஸ்ப்ளே

இதுகுறித்து அறிக்கையின்படி, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, வன்பொருளின் ஆழ்ந்த முதலீடுகளை டீஸ் செய்ததோடு, இந்த ஆண்டுக்கான புதிய வன்பொருள் தொடர்பான ஒரு குறிப்புகளை வெளியிட்டார். கடந்தமுறை வெளியான கசிவுகளின்படி, பிக்சல் 5 போல் மேல் இடதுபுறத்திற்கு பதிலாக காட்சியின் மேல் மையத்தில் கட்அவுட் துளை பஞ்ச் டிஸ்ப்ளே இருக்கக்கூடும் என தெரிகிறது. அதேபோல் இதன் செல்ஃபி கேமரா 4கே வீடியோ பதிவை ஆதரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 6 சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

கூகுள் பிக்சல் 6 சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

கூகுள் பிக்சல் 6 சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் இது 6.2 இன்ச் டிஸ்ப்ளே அளவைக் கொண்டிருக்கும் எனவும் தெரிகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 16 எம்பி முதன்மை கேமரா, 16 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 12 எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 12 எம்பி முன்புற கேமராவுடன் வரும் என தெரிகிறது. ஸ்மார்ட்போன் சந்தைகளில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு சாதனமானது குவால்காம் ஸ்னாப்டிராகன் மற்றும் மீடியாடெக் செயலிகளில் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் நிறுவனம் அதன் தனிப்பயனாக்கப்பட்ட எக்ஸினோஸ் செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Google Pixel 6 May Launching with Own GS101 White chapel Soc
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X