நம்ப முடியாத கேமரா மோடு உடன் கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்கள்.. இன்னும் என்னலாம் இருக்கு?

|

கூகிள் விரைவில் தனது கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்களை இந்த 2021 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக்க உள்ளது. இது நிகழும்முன், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல கசிவுகள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அப்படி இம்முறை இந்த புதிய ஸ்மார்ட்போனில் பெறக்கூடிய கேமரா திறன்களைப் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்முறை கூகிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

கூகிள் பிக்சல் 6 மற்றும் கூகிள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

கூகிள் பிக்சல் 6 மற்றும் கூகிள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

முதலில் கூகிள் இம்முறை தனது போன்களின் தோற்றத்தில் புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது, கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனை தகுதியான மேம்படுத்தலாக மாற்றக்கூடிய வகையில் இதன் புதிய டிசைன் பார்க்கப்படுகிறது. அதேபோல், கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் முக்கிய கேமரா மேம்பாடுகளையும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. லீக்ஸ்டர் ட்ரான் கூற்று படி, பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் கிம்பல் (gimbal) போன்ற நிலையான கேம் மோடு உடன் வரக்கூடும்.

பெரிய சாம்சங் கேமரா சென்சார் உடன் புதிய வீடியோகிராஃபி மோடு

பெரிய சாம்சங் கேமரா சென்சார் உடன் புதிய வீடியோகிராஃபி மோடு

இது எல்ஜி விங் மற்றும் விவோ எக்ஸ் 50, விவோ எக்ஸ் 60 தொலைப்பேசிகளில் காணப்படும் அம்சத்திற்கு ஒத்ததாக இருக்கும். இந்த புதிய கூகிள் பிக்சல் 6 சாதனம் ஒரு பெரிய சாம்சங் கேமரா சென்சார் உடன் புதிய வீடியோகிராஃபி மோடு உடன், பெரிய மேம்பாடுகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, கூகிள் தயாரித்த நியூரல் ப்ராசஸிங் யூனிட் (NPU) மற்றும் இமேஜ் சிக்னல் பிராசஸர் (ISP) உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கூகிள் பிக்சல் கேமரா பயன்பாட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

கூகிள் சிப்பை பெரும் கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்கள்

கூகிள் சிப்பை பெரும் கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்கள்

கேமரா மேம்பாடுகளைத் தவிர, பிக்சல் 6 ஸ்மார்ட்போன்கள் நிறைய மாற்றங்களை எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில், பிக்சல் 6 மற்றும் 6 புரோ ஆகியவை நிறுவனத்தின் இன்பில்ட் சிப் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வைட் சேப்பல் என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டுள்ளது. இது ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட கூகிளுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

மூன்று வண்ண மறுபாடுடன் பெரிய செவ்வக கேமரா ஹம்பு

மூன்று வண்ண மறுபாடுடன் பெரிய செவ்வக கேமரா ஹம்பு

இந்த சிப் 5nm செயல்முறை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் இணையாக இருக்கும்.கூகிள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இதில் அவர்கள் ஒரு பெரிய செவ்வக கேமரா ஹம்புடன் (போகோ எம் 3, மி 11 அல்ட்ராவில் காணப்படுவது போல) மூன்று வண்ண மறுபாடுடன் கூடிய கேமரா அமைப்பை கொண்டுவந்துள்ளனர். இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சதுர வடிவ கேமரா அமைப்பிற்கு இது விடைபெறும். முன் மேல் இடது மூலைக்கு பதிலாக டிஸ்பிளேவின் நடுவில் ஒரு பஞ்ச்-ஹோல் வைக்கப்பட்டுள்ளது.

5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 இணக்கம்

5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 இணக்கம்

இந்த ஸ்மார்ட்போன் 120Hz AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் கொண்ட இரட்டை பின்புற கேமராக்கள், பாஸ்ட் சார்ஜ்ஜிங் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸ், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இன்னும் இந்த சாதனம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதன் விலை மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய தகவல்களும் விரைவில் இணையத்தில் கசியலாம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel 6 and 6 Pro smartphones to get a gimbal mode : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X