ஆகஸ்ட்: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்.!
கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அதிநவீன அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூகுள்
பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனை விட தனித்துவமான அம்சங்களுடன் இந்த கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதாவது கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கூகுள் பிக்சல் 4ஏ மற்றும் பிக்சல் 5 மாடல்களின் அதே வடிவமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் வெளியாகும் எனவும், ஆனால் தனித்துவமான அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போது ஆன்லைனில் வெளியான இந்த சாதனத்தின்
சில அம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ மேம்படுத்தப்பட்ட கேமரா வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் டூயல் கேமரா வசதி இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே அட்டகாசமான செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ மாடல் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 3.5 மிமீ ஆடியோ ஜாக், பின்புற கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன்கூகுள் பிக்சல் 5ஏ வெளிவரும் என்று கூறப்படுகிறது.

முதலில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தான் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான அம்சங்களுடன் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனம் இந்தியாவில் ரூ.35,000-விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications