Home
Mobile

ஆகஸ்ட் 17: 4680எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 5ஏ.!

கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆகஸ்ட் 17: 4680எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 5ஏ.!

குறிப்பாக கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய சந்தைகளில் மட்டுமே முதலில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த பிக்சல் 5ஏ சாதனம் ஆனது ரூ.33,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே இந்த சாதனத்தின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 4680 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

ஆகஸ்ட் 17: 4680எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 5ஏ.!

கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பெரிய டிஸ்பிளே
என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆகஸ்ட் 17: 4680எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 5ஏ.!

3.5 மிமீ ஆடியோ ஜாக், பின்புற கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது அசத்தலான கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Google Pixel 5a with 13 Mega Pixel Camera Launching in India on August 17: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X