கூகுளிலும் அதே பிரச்சனை: ஏன் கேட்கிறீங்க சூடு தாங்க முடியல- கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்துக்கு வந்த சிக்கல்!
கூகுள் சமீபத்தில் கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்தை அறிமுகப்படுத்தியது. இது முன்னதாகவே வீடியோக்களை பதிவு செய்யும் போது அதிகவெப்ப பிரச்சனைகளை சந்திப்பதாக அறிக்கைகளில் தெரிவித்தது. கிஸ்மோசினாவின் அறிக்கைப்படி சாதனத்தில் குறிப்பிட்டப்பட 4கே வீடியோவை பதிவு செய்ய முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்
அதேபோல் சமீபத்திய அறிக்கைகளின்படி, 4கே வீடியோக்களை வினாடிக்கு 60 பிரேம்களை பதிவு செய்யும்போது கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடைவதாக கூறப்படுகிறது. காட்சிகளை பதிவு செய்யும்போது வெப்பநிலை சராசரி நிலைக்கு வரும்வரை கேமராவை மூடும்படி கேட்பதாகவும் கூறப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

விமர்சகர் தெரிவித்த தகவல்
இதுகுறித்த டுவிட்டில், பயனர் ஒருவர் தனது பிக்சல் 5ஏ சாதனம் கேமராவில் காட்சிகளை பதிவு செய்யும் போது சாதனம் மிகவும் சூடாக உள்ளது சாதனம் குளிர்விக்கும் வரை கேமராவை மூடும்படி கேட்பதாக குறிப்பிட்டார். வீடியோக்கள் பதிவு செய்யும்போது வெப்பமடைவதாக புகார் அளித்தார். அதேபோல் அவர் 4கே எஃப்பிஎஸ் 30 மற்றும் 1080 பிக்சல் 30 எஃப்பிஎஸ்-ல் சுமார் 2 நிமிட பதிவுக்கு பிறகு பிக்சல் 5ஏ சாதனம் சூடாவதாகவும் கேமராவை மூடும்படி கேட்பதாகவும் குறிப்பிட்டார்.

பிக்சல் 5 சாதனமும் இதே பிரச்சனை
இந்த சிக்கலை எதிர் கொள்ளும் ஸ்மார்ட்போன் ஆனது கூகுள் பிக்சல் 5ஏ மட்டுமல்ல, சில பயனர்கள் பிக்சல் 5 சாதனமும் இதே பிரச்சனையை சந்திப்பதாக கூறினார். இது ஆண்ட்ராய்டு போலீஸார் உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் கூகுள் இந்த பிரச்சனையை ஒப்புக் கொள்ளவில்லை. நிறுவனம் எப்போது இதை சரிசெய்ய திட்டமிட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 4680 எம்ஏஎச் பேட்டரி
கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் 4680 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். பிக்சல் 5ஏ சாதனமானது 6.34 இன்ச் ஓஎல்இடி உளிச்சாயுமோரம் இல்லாத திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 765ஜி 5ஜி மொபைல் இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் பாதுகாப்பான டைட்டன் எம் பாதுகாப்பு தொகுதி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு உடன் வருகிறது. கூகுள் பிக்சல் 5ஏ சாதனமானது புதிய வண்ணத்தை வழங்குகிறது. இது பிளாக் ஃபாரஸ்ட் க்ரீன் வண்ண விருப்பம் மற்றும் ஆலிவ் வண்ண சக்தி பட்டனுடன் வருகிறது.

6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு
கூகுள் பிக்சல் 5ஏ சாதனம் ஆனது 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படும்
கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

8எம்பி செல்பீ கேமரா ஆதரவு
கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications