ஜூன் 11: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் கூகுள் பிக்சல் 5ஏ.!
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அதேபோல் ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் உடன் பிக்சல் 6 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட வாயப்பு உள்ளது. குறிப்பாக பிக்சல் 5ஏ மற்றும் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சிறிய ஹோல்-பன்ச் வழங்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

கூகுள் பிக்சல் 6 மாடலில் செல்பீ கேமரா ஸ்மார்ட்போனின் நடுவில் வழங்கப்பட்டு இருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு பிக்சல் 5ஏ சாதனத்தில் பன்ச் ஹோல் 55 பிக்சல் அளவு கொண்டிருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற பிக்சல் போன்களில் இது 65 பிக்சலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 ஓஸ் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மேம்படுத்தக்கூடிய அம்சமும் உள்ளது. இதன் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில் 5.81 இன்ச் அளவு, முழு ஹெச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 12 எம்பி பின்புற கேமரா எஃப்1.7 லென்ஸ் உடன் வருகிறது. செல்பி கேமராவிற்கென முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

கூகிள் பிக்சல் 4a சிறப்பம்சங்கள்
5.81' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளே
எச்டிஆர் ஆதரவுடன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட்
6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ்
அண்ட்ராய்டு 10 இயங்குதளம்
12MP பின்புற கேமரா மற்றும் எல்.ஈ.டி ஃப்ளாஷ்
8MP முன்பாக செல்ஃபி கேமரா
3.5 மிமீ ஆடியோ ஜாக்
18W ஃபாஸ்ட் சார்ஜிங்
3140 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications