வியக்கவைக்கும் விலையில் கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கூகுள் பிக்சல் 3 ஸ்மாரட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் உள்ளது.

|

கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் இன்று கூகுள் பிக்சல் 3 மற்றும் கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப ஆதரவுகள் உடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

வியக்கவைக்கும் விலையில் கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் கருப்பு, வெள்ளை, ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூகுள் பிக்சல் 3 மற்றும் கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 3

கூகுள் பிக்சல் 3

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.5-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
2160x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு
கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 ஆதரவு உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கூகுள் பிக்சல் 3 செயலி:

கூகுள் பிக்சல் 3 செயலி:

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு Android 9.0 Pie இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் எச்டிஆர் ஆதரவு மற்றும் 100,000: 1 சூப்பர் கான்ட்ராஸ்ட் விகிதம் போன்ற அம்சங்கள் உள்ளன.

சேமிப்பு:

சேமிப்பு:

கூகுள் பிக்சல் 3 ஸ்மாரட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் உள்ளது.மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தன்மை போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 2915எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப- சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் பின்புறம் 12.2எம்பி இரட்டை பிக்சல் ஒற்றை கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு f / 1.8துளை,76 டிகிரி பார்வை கொண்ட ஆட்டோஃபோகஸ் இவற்றுள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி வைட்-ஆங்கள் + 8எம்பி சென்சார் கொண்ட டூயல் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளத.

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 2960x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். பின்பு எச்டிஆர் 100,000:1 கான்ட்ராஸ்ட் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்து. மேலும் விரைவில் சார்ஜ் ஆகும் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 3430எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதியை கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்.

விலை:

விலை:

64ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.71,000-ஆக உள்ளது.
128ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.80,000-ஆக உள்ளது.
64ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.83,000-ஆக உள்ளது.
128ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.92,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 3, Pixel 3XL with Android Pie & dual front camera launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X