Home
Mobile

வியக்கவைக்கும் விலையில் களமிறங்கும் கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல்.! (அம்சங்கள்).!

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது

கூகுள் நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

வியக்கவைக்கும் விலையில் களமிறங்கும் கூகுள் பிக்சல் 3 &  பிக்சல் 3எக்ஸ்

மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மட்டும் சற்று உயர்வாக உள்ளது, இருந்தபோதிலும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்கள். இப்போது இரண்டு ஸ்மார்ட்போன்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
1440 x 2960 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் கேமரா:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் கேமரா:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
3430எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 3:

கூகுள் பிக்சல் 3:

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் முழுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

கூகுள் பிக்சல் 3 செயலி:

கூகுள் பிக்சல் 3 செயலி:

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு அசத்தலான
கேமரா அம்சங்கள் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 2915எம்ஏஎச் பேட்டரி இவற்றுள்
பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த சாதனங்களின் ஆரம்ப விலை ரூ.52,400-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 3 and Pixel 3 XL listed on Chinese online store: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X