அக்டோபர் 5 முதல் அதிரடியான கூகுள் பிக்சல் 2 மற்றும் 2 எக்ஸ்எல்.!
தவிர, ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இக்கருவிகள் இயங்கும்.
கூகுள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிக்சல் கருவிகளான கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதியன்று தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டு தேதி நெருங்குவதை தொடந்து அடுத்த கூகுள் பிக்சல் தொலைபேசிகளின் சாத்தியமான அம்சங்கள் பற்றிய வதந்திகள் ஆன்லைனில் வட்டமடிகின்றன. சமீபத்தில் வெளியான கூகுள் பிக்சல் 2 லீக்ஸ் ஆனது சாதனங்களின் வடிவமைப்பு சார்ந்த விவரங்களை நமக்கு வழங்கியது.

வடிவமைப்பு
கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகிய கருவிகளுக்கு இடையே அளவு வேறுபாடுகள் தவிர்த்து, பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பிக்சல் 2 ஆனது அதன் முதல் தலைமுறை பிக்சல் வடிவமைப்பு மொழியைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.

எச்டிசி, எல்ஜி நிறுவனம்
கடந்த ஆண்டு போலன்றி, பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் என இரண்டுமே எச்டிசி நிறுவனத்தால தயாரிக்கப்படாமல், இந்த முறை கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனமும், பெரிய டிஸ்பிளே கொண்ட பிக்சல் 2 எக்ஸ்எல் சாதனத்தை எல்ஜி நிறுவனமும் தயாரிக்கும்.

டிஸ்பிளே
பிக்சல் 2 எக்ஸ்எல் ஆனது 5.99 அங்குல க்யூஎச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இது ஒரு உயரமான மற்றும் பெஸல்லேஸ் டிஸ்பிளே கொண்டிருக்கலாம். மறுபுறம் எச்டிசி மூலம் தயாரிக்கப்படும் பிக்சல் 2 ஆனது பெரிய பெஸல்களுடைய ஒரு 4.97 அங்குல முழு எச்டி ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டி வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியோ ஜேக் இருக்காது
பிக்ஸல் 2 மற்றும் பிக்ஸல் 2 எக்ஸ்எல் ஆகியவற்றில் ஆடியோ ஜேக் இருக்காது என்றும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வெளியான மற்றொரு தகவல் - பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்ட பிக்சல் 2 பற்றிய விவரங்களை நமக்கு அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்புற டூயல் கேமரா
அந்த லீக்ஸ் தகவலில் வெளியானது ஒரு ஆரம்ப டெவலப்பர் கருவியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சமீபத்திய லீக்ஸ் பிக்சல் 2 சாதனத்தின் பெஸல்லெஸ் டிஸ்பிளே அம்சத்தை மறுத்தாலும், பின்புற டூயல் கேமரா அம்சத்தை பொறுத்தமட்டில் முந்தைய கசிவுகளுடன் ஒற்றுப்போகிறது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் சுற்றியுள்ள பிற வதந்திகளை பொறுத்தமட்டில் இக்கருவிகள் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 836 சிப்செட் கொண்டிருக்கலாம். தவிர, ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இக்கருவிகள் இயங்கும்.


Click it and Unblock the Notifications