ஐபோன் எக்ஸ் வாங்குறதுக்கு பதிலாக கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் வாங்கலாம்.!
பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 64ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.73,000/- என்றும், அதன் 128ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.82,000/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று (புதன்கிழமை) முதல் அதன் விற்பனையை தொடங்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன், ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்யேகமாக ஆன்லைனில் கிடைக்கும் அதேசமயம் ஆஃப்லைன் சேனல்களிலும் கிடைக்கும்.

அதாவது, ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, பூர்விகா, சங்கீதா மொபைல்கள், விஜய் சேல்ஸ் மற்றும் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகவும் (இன்று) புதனன்று தொடங்கி வாங்க முடியும்.

இந்திய விலை நிர்ணயம்.!
இந்தியாவில் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 64ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.73,000/- என்றும், அதன் 128ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.82,000/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிதி வாய்ப்பு.!
எச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து பிக்சல் 2 எக்ஸ்எல் கருவிக்கான நிதி வாய்ப்புகளை கூகுள் அறிவித்துள்ளது என்பதும். கடந்த நவம்பர் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 வாங்க கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோ அறிவித்துள்ள சலுகை
பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், அதன் 64ஜிபி மாறுபாடானது ரூ.61,000/- என்றும், அதன் 128 ஜிபி மாடல் ரூ.70,000/- என்ற புள்ளியை எட்டியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவுகளுக்கு குறிப்பட்ட சலுகைகளை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிக்சல் 2 எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 2 அம்சங்கள்.!
பிக்சல் 2 ஒரு 5 அங்குல சினிமெட்டிக் 127-மிமீ முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. மறுகையில் உள்ள பிக்சல் 2 எக்ஸ்எல் ஆனது, 18: 9 விகிதத்திலான ஒரு 6 இன்ச் க்யூஎச்டி + (2880 x 1440 பிக்சல்கள்) பி-ஓ எல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
இரண்டு கருவிகளின் டிஸ்பிளேக்களுமே 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்த கைபேசிகள் 3.5மிமீ ஹெட்ஜாக்கையும் கொண்டிருக்கும். கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகிய இரண்டுமே க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835எஸ்ஓசி மற்றும் 4ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகின்றன.

பேட்டரி
இந்த கைபேசிகள் 64ஜிபி மற்றும் 128ஜிபி என்ற இரண்டு சேமிப்பு வகைகளில் வருகின்றன. பிக்சல் 2 ஆனது ஒரு 2700எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க, பிக்சல் 2 எக்ஸ்எல் ஆனது ஒரு 3520எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது.

கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில், பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகியவை தொழில்-சிறந்த கேமரா உணரிகளை வழங்குகின்றன. இரு கருவிகளும் எப் / 1.8 துளை, ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12.2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம், எப்.2.4 துலையுடனான 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.


Click it and Unblock the Notifications