5.99-இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவரும் அட்டகாசமான கூகுள் பிக்சல் 2.!
கூகுள் பிக்சல் 2 விலை பொறுத்தமட்டில் ரூபாய்.67,000க்கு விற்ப்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.!
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் வரிசைகளில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் இடம்பெறும் என அந்நிறுவனம் கூறியுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன்.
இக்கருவி ஸ்னாப்டிராகன் 835 செயலி உடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இவை இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.99அங்குல அளவு முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 1080 வீடியோ பிக்சல் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

கேமரா:
கூகுள் பிக்சல் 2 பின்புற கேமரா 12.3 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

4ஜிபி ரேம்:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 128ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

சாப்ட்வேர்:
கூகுள் பிக்சல் 2 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 835 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
கூகுள் பிக்சல் 2 பொருத்தவரை 3540எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

விலை:
கூகுள் பிக்சல் 2 விலை பொறுத்தமட்டில் ரூபாய்.67,000க்கு விற்ப்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications