Home
Mobile

கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் எக்ஸ்எல் 2 (வெளியீடு அம்சங்கள்).!

பிக்சல் ஸ்மார்ட்போன்கள் க்வால்காம் நிறுவனத்தின் ஸ்னாப் டிராகன் 836 எஸ்ஓசி கொண்டு இயங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

கூகுள் நிறுவனம் அதன் அடுத்த பிக்சல் ஸ்மார்ட்போன்களை - பிக்சல் 2 மற்றும் பிக்சல் எக்ஸ்எல் 2 என்று அழைக்கப்படும் - விரைவில் களமிறக்க தன்னை தயார்படுத்துகிறது என்று பிரபலமான டிப்ஸர் இவான் பிளஸ் வியாழனன்று ட்வீட் செய்த மூலம் அறியப்பட்டது. இதன் மூலம் இரண்டாம் தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வருகிற அக்டோபர் 5 அன்று வெளியிடப்படும் என்ற ஆர்வம் அதிகமாகியுள்ளது.

கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் எக்ஸ்எல் 2 (வெளியீடு அம்சங்கள்).!

முன்னர் வெளியான தகவலில் இருந்து அடுத்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள் க்வால்காம் நிறுவனத்தின் ஸ்னாப் டிராகன் 836 எஸ்ஓசி கொண்டு இயங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தான் க்வால்காமின் சமீபத்திய எஸ்ஓசி கொண்டு இயங்கும் முதன்மை சாதனமாக இருக்கும்.

பெஸல்-லெஸ் டிஸ்பிளே

பெஸல்-லெஸ் டிஸ்பிளே

பிக்சல் 2 மற்றும் பிக்சல் எக்ஸ்எல் 2 ஆகிய கருவிகள் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மற்றும் வரவிருக்கும் எல்ஜி வி 30 ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களை தொடர்ந்து வெளியிடப்படலாம். பெஸல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த தொலைபேசிகள் பெஸல்கள் கொண்டும் வெளிவரலாம் என்ற முரண்பாடான தகவல்களும் வெளியாகியுள்ளன.

எட்ஜெசென்ஸ் ஸ்டைல் ​​ஃபிரேம்

எட்ஜெசென்ஸ் ஸ்டைல் ​​ஃபிரேம்

எச்டிசி உற்பத்தியிலான பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ஆனது எட்ஜெசென்ஸ் ஸ்டைல் ​​ஃபிரேம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகையில், பிக்சல் எக்ஸ்எல் 2 ஆனது எல்ஜி மூலம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் 18: 9 என்ற அளவிலான பெஸல்லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 8.0.1 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.0.1 ஓரியோ

சமீபத்தில் அமெரிக்க எப்சிசி இணைய தளத்தில் பிக்சல் 2 காணப்பட்டது. எச்டிசி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுமென சுட்டிக்காட்டிய லீக்ஸ் தகவலில் இருந்து பிக்சல் 2 ஸ்மார்ட்போன் எச்டிசி யூ11 போன்று இருக்கும் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 8.0.1 ஓரியோ கொண்டு இயங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

கூடுதலாக, பிக்சல் 2 ஆனது 64 ஜிபி மற்றும் 128ஜிபி என்ற இரண்டு உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு விருப்பங்களில் வெளியாகலாம். மேலும் என்எப்சி, ப்ளூடூத் வைஃபை ஆகிய இணைப்பு ஆதரவுகளுடன் 4ஜிபி ரேம் கொண்டிருக்கலாம்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

பிக்சல் 2 மற்றும் பிக்சல் எக்ஸ்எல் 2 ஆகியவை முறையே 4.95 அங்குல முழு எச்டி மற்றும் 5.99 அங்குல க்யூஎச்டி (1440x2560 பிக்ஸல்) டிஸ்ப்ளே அளவை கொண்டிருக்கலாம் மேலும், இந்த பிக்சல் சாதனங்களில் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் அம்சத்தை கைவிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில தயாரிப்புகள்

இன்னும் சில தயாரிப்புகள்

அக்டோபர் மாதத்தில் நிகழும் கூகுள் வன்பொருள் நிகழ்வு பிக்சல் கருவிகள் தவிர்த்து இன்னும் சில தயாரிப்புகள் வெளியாகலாம். இந்த வாரத்திற்கு முன்னதாக, ஒரு புதிய க்ரோம்புக் பிக்சல் மற்றும் மினி கூகிள் ஹோம் ஸ்பீக்கர் சார்ந்த பணிகளில் கூகிள் ஈடுபடுவதாக கூகுள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Pixel 2, Pixel XL 2 Launch Tipped for October 5, to Sport Snapdragon 836 SoC. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X