ஐபோன்கள் ஓரம்போ.! வந்துவிட்டது கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 மற்றும் 2 எக்ஸ்எல்.!
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டி கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு தற்சமயம் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் முதலில் கிடைக்கும் என்று கூகுள் அறிவித்தத, அதன்பின்பு இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 2(64ஜிபி) ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.42,233-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.55,248-என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தவிர, ஸ்மார்ட்போன்கள் ஐபி67 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஸ்பீக்கர் செயல்திறன் மிக அருமையாக உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் அடாப்டிவ் ஆடியோ ஸ்பீக்கர் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 2:
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். 2700எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

பிக்சல் 2 கேமரா:
இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

பிக்சல் 2 இணைப்பு ஆதரவுகள்:
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளம் மற்றும் வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஓஎல்இடி க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். 3520எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

பிக்சல் 2 எக்ஸ்எல் கேமரா:
இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

பிக்சல் 2 எக்ஸ்எல் இணைப்பு ஆதரவுகள்:
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளம் மற்றும் வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications