ஆன்லைனில் வெளிவந்த கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ்எல் புகைப்படங்கள்.!
கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் மற்றும் ஹோம் பட்டன் வசதி பின்புறம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களை நாளை அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம். மேலும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெரும் முக்கிய நிகழ்ச்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவான் பிளாஸ் டுவிட்டர் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் மற்றும் அனைத்து தகவல்களும் வெளிவந்துள்ளது. கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அக்டோபர் 19-ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 835:
கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் மற்றும் ஹோம்
பட்டன் வசதி பின்புறம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டிஸ்பிளே:
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 16:9 என்ற திரை விகிதம்
கொண்டுள்ளது இந்த பிக்சல் 2 ஸ்மார்ட்போன். பிக்சல் 2 எக்ஸ்எல் பொறுத்தவரை 6-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 18:9 என்ற திரை விகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 4ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 12எம்பி ரியர் கேமரா இவற்றுள் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்:
இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பாதி கிளாஸ் வடிவமைப்பு மற்றும் பாதி மெட்டல் வடிவமைப்பு கொண்டவையாக உள்ளது, அதன்பின் கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.42,603 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பிக்சல் 2 எக்ஸ்எல்ஸ்மார்ட்போனின் விலை ரூ.55,720ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications