கூகுள் பிக்சல் 2 & பிக்சல் 2 எக்ஸ்எல் சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

கூகுள் பிக்சல் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் பல தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட்போனகளுமே இயங்குகின்றன. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள்.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் பொறுத்தவரை அட்டகாசமான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது, மேலும் பல அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் பொதுவாக 5.99-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் இவற்றுள்அடக்கம் எனக் கூறப்படுகிறது. அதன்பின் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் 4.97-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் 2.45ஜிகாஹெர்ட்ஸ் குவால் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது, மேலும் கூகுள் பிக்சல் 2 குவால் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆப்ஸ் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள்.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் கூகுள் பிக்சல் 2 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இவற்றில் பின்புற டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எல்இடி பிளாஷ் ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போன்களில் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Pixel 2 and Pixel 2 XL 3D renders leaked online; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X