Home
Mobile

Google போட்டான் பாரு.. OLED டிஸ்பிளே.. 4870mAh பேட்டரி.. G6 சிப்செட்.. புது Pixel போன்.. எந்த மாடல்?

கூகுள் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கும் கூகுள் பிக்சல் 11ஏ (Google Pixel 11a) ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. முந்தைய மாடலைவிட பேட்டரி கேபாசிட்டி கம்மியாக இருக்கிறது. ஆனால், டிஸ்பிளே, சிப்செட், செக்யூரிட்டியில் அப்கிரேட்டை பார்க்க முடிகிறது. இந்த பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 11ஏ அம்சங்கள் (Google Pixel 11a Specifications): 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2250 நிட்ஸ் எச்டிஆர் பிரைட்னஸ் கொடுக்கிறது. மேலும், 3350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. 4870mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது.

Google போட்டான் பாரு.. OLED டிஸ்பிளே.. 4870mAh பேட்டரி.. G6 சிப்செட்!

கூகுள் டென்சார் ஜி6 (Google Tensor G6) சிப்செட் கொடுக்க இருக்கிறது. டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M3 Security Chip) கொடுக்கப்படுகிறது. ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இருக்கும். அப்டிசியன் பிளாக் (Obsidian Black), ஆலிவ் கிரீன் (Olive Green), ப்ரோஸ்ட் பர்பிள் (Frost Purple) மற்றும் ஃபோக் சில்வர் (Fog Silver) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலையை இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களே பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போனில் கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a Specifications): 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போனிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே புரொடெக்சனை எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் எதிர்பார்க்கலாம். அதேபோல 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கட்டாயம் கொடுக்கப்படும்.

48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பிடிஏஎப் (PDAF) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்துள்ளது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. கேமரா கோச் (Camera Coach), ஆட் மீ (Add Me), மேக்ரோ போகஸ் (Macro Focus) பீச்சர்கள் உள்ளன.

மேலும், நைட் சைட் (Night Sight), ஆஸ்ட்ரோபோட்டோகிராபி (Astrophotography), போர்ட்ராய்டு மீ (Portrait Mode), பேஸ் அன்பிளர் (Face Unblur), லாங் எக்ஸ்போசர் (Long Exposure) மற்றும் ரியல் டோன் (Real Tone) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5100mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, பிக்சல் 11ஏ மாடலில் கேபாசிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆக இருந்தது. ஆகவே, கூகுள் பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. அறிமுக சலுகைகள் போக கம்மியான விலைக்கு கிடைக்கலாம். ஓரிரு வாரங்களில் விலை விவரங்கள் வெளியாகும்.

Best Mobiles in India

English summary
Google Pixel 11a With Tensor G6 Chipset 4870mAh Battery Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X