Google அடிச்சான் பாரு.. முழுசா ரூ.17,800 ஆஃபரில் Pixel போன்.. 48MP கேமரா.. 4985mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் ஸ்மார்ட்போனை நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு வாங்க வேண்டுமானால், பிளிப்கார்ட் தளத்தில் ஆஃபர் விலைக்கு கிடைக்கும் கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11) ஸ்மார்ட்போனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். 48 எம்பி கேமரா,4985mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே கொண்ட இந்த பிக்சல் மாடலின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.89,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.17,800 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.72,199 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த பிக்சல் 11 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 11 அம்சங்கள் (Google Pixel 11 Specifications): 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட மாடலாக கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்ட கூகுள் டென்சார் ஜி6 (Google Tensor G6) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M3 Security Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 48 எம்பி ரியர் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறது.
மேலும், 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் சினிமாடிக் பிளர் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 20x சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 4K 60 FPS ரெக்கார்டிங் கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 10.5 எம்பி கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. பேஸ் அன்லாக் உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 197 கிராம் எடை கொடுத்துள்ளது. காம்பாக்ட் டிஸ்பிளே கிடைத்தாலும், லைட் வெயிட் மாடலாக இல்லை.
30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4985mAh பேட்டரியை இந்த இந்த கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 25W கியூஐ2.1 வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்ஏ (5G SA/NA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் 6 எல்இ (Bluetooth 6 LE) கிடைக்கிறது. அல்ட்ரா வைடுபேண்ட் சிப் (Ultra Wideband Chip) உள்ளது. மேலும், டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications
