வொர்த்து வர்மா.. 5000mAh பேட்டரி, 12GB ரேம், Ultra-low-light வீடியோ கேமரா.. Google-ன் புது Pixel போன்!
கூகுள் (Google) நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 11 (Pixel 11) குறித்த விவரங்கள் இப்போதே வெளியாக தொடங்கி உள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.
ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வழியாக டிப்ஸ்டர் ஒன்லீக்ஸ் (OneLeaks) பகிர்ந்த புகைப்படங்கள் ஆனது, புதிய பிக்சல் 11 மாடல் ஆனது அதன் முந்தைய மாடலை (அதாவது பிக்சல் 10 மாடலை) பெருமளவில் அடிப்படையாக கொண்ட வடிவமைப்பையும், அதே சமயம் நுட்பமான மேம்பாடுகளையும் சுட்டிக்காட்டுகின்றன.

புதிய பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆனது 152.8 x 72 x 8.5 மிமீ அளவை கொண்டிருக்கும் என்றும், 6.3-இன்ச் எல்டிபிஓஅமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த அளவு பிக்சல் 10 மாடலை போலவே உள்ளது. அதாவது இது அளவு மற்றும் வடிவத்தில் குறைந்தபட்ச மாற்றங்களையே குறிக்கிறது.
ஆனால் கூகுள் நிறுவனத்தின் "பிரத்யேகமான" ரியர் கேமரா பார் ஆனது சற்று பெரியதாகவும், அதே சமயம் மெல்லியதாகவும் தோன்றுகிறது. ஆனாலும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் அப்படியே தான் உள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை பிக்சல் 11 ஸ்மார்ட்போனால் கூகுளின் அடுத்த தலைமுறை டென்சர் ஜி6 பிராசஸர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 7-கோர் கட்டமைப்பை கொண்டிருக்கும் என்றும், டிஎஸ்எம்சி-யின் 2என்எம்செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் ஆனது, சாம்சங்கின் மோடமிற்கு பதிலாக புதிய மீடியாடெக் எம்90 மோடமை பயன்படுத்துவதன் மூலம், கனெக்டிவிட்டி ஹார்ட்வேரிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம். செக்யூரிட்டியும் கூட மேம்படுத்தப்படும் மற்றொரு அம்சமாக இருக்கலாம். முந்தைய பிக்சல் போன்களில் பயன்படுத்தப்பட்ட டைட்டன் எம்2-க்கு பதிலாக, இந்த போனில் புதிய டைட்டன் எம்3 செக்யூரிட்டி கோப்ராசஸர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது "கூகுள் எபிக்" என்று குறிப்பிடப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, பிக்சல் 11 ஸ்மார்ட்போன் ஆனது ஆனது 12ஜிபி ரேம்-ஐ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் 128ஜிபி-இல் தொடங்கி 256ஜிபி வரை செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான பிளாக்ஷிப் போன்களின் வெளியீடுகளில் காணப்பட்ட போக்குகளுக்கு ஏற்ப, கூகுள் பிக்சல் 11 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜை 256ஜிபி ஆக அதிகரிக்கக்கூடும் என்றும் யூகங்கள் உள்ளன.
பிக்சல் 11 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, ஆன்-டிவைஸ் ப்ராசஸிங் (on-device processing) உடனான அல்ட்ரா லோ லைட் வீடியோ மோட் (Ultra-low-light video mode) உட்பட, புதிய மென்பொருள் சார்ந்த அம்சங்கள் இடம்பெறலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன.
இது கிளவுட் செயலாக்கத்தை சார்ந்து இருக்காமல், இருண்ட சூழல்களில் உயர்தர வீடியோவை படம் பிடிக்க அனுமதிக்கும். கூடுதல் அம்சங்களாக 4கே 30 எப்பிஎஸ் ஸ்பீடில் சினிமாட்டிக் ப்ளர் மற்றும் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளில் ஒளியை சரிசெய்வதற்கான வீடியோ ரீலைட் டூல் ஆகியவைகள் இடம்பெறலாம்.
கடைசியாக இது 5,000mAh பேட்டரி உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை முந்தைய மாடலை போலவே, கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் விலையும் $799 இல் (இந்திய ரூபாய் மதிப்பின்படின் சுமார் ரூ.75,130 இல்) இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








