Home
Mobile

Google போட்டான் பாரு.. வெளியீட்டுக்கு முன்பே Google Pixel 11 Series விலை தெரிஞ்சு போச்சு.. அல்ட்ரா பிரீமியம்!

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் (Google Pixel 11 Series) இந்தியா உள்பட குளோபல் மார்கெட்களில் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே விலை விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதில் கிடைக்க இருக்கும் 4 மாடல்களின் பீச்சர்களும் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இப்போது, விலையும் சேர்ந்து, பிரீமியம் மாடல்களாக இருக்கும் என்பதை உறுதி செய்துவிட்டன.

குளோபல் மார்கெட்டில் இந்த கூகுள் பிக்சல் 11 சீரிஸ் மாடல்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலைகள் கசிந்துவிட்டன. இதை வைத்து இந்திய விலைகள் யூகிக்கப்பட்டன. ஆனால், இப்போது, நேரடியாக இந்திய மார்கெட்டுக்கான விலைக்கு தெரியவந்துள்ளன. நம்பகமான வட்டாரங்களிடமிருந்து கிஸ்பாட் (Gizbot) தளம் பெற்றுள்ள விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Google போட்டான் பாரு.. வெளியீட்டுக்கு முன்பே Google Pixel 11 விலை!

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் விலை

இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.89,999 ஆக இருக்கும். இது கடந்த ஆண்டு வெளியான கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விலையை விட ரூ.10,000 அதிகமாகும். மேலும், இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,09,999 ஆக உள்ள நிலையில், பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 1,19,999 ஆக இருக்கும்.

அதேபோல கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,34,999 ஆக இருக்கும். இது முன்பு வெளியான பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலை விட ரூ.10,000 அதிகமாக இருக்கிறது. இறுதியாக, ஃபோல்டு மாடலாக இருக்கும் பிக்சல் 11 ப்ரோ போல்டு ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,86,999 ஆக இருக்கும். முந்தைய மாடலின் விலை ரூ. 1,72,999 ஆக இருந்தது.

ஆகவே, இந்த போல்டு மாடல் அதிக விலையில் வெளியாக இருப்பது தெரிகிறது. பிக்சல் 11 மாடல்களில் பேஸ் வேரியண்ட் 256 ஜிபியாக இருக்கும். இதுவே விலை அதிகமாக இருக்க காரணமாக இருக்கலாம். அதேபோல பிக்சல் 11 ப்ரோ போல்டு மாடலின் பேஸ் வேரியண்ட் 512 ஜிபியில் இருந்து இருக்கும். இப்போது, இந்த மாடல்களின் பீச்சர்களுக்கு செல்லலாம்.

Google போட்டான் பாரு.. வெளியீட்டுக்கு முன்பே Google Pixel 11 விலை!

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் அம்சங்கள்

கூகுள் பிக்சல் 11 அம்சங்கள்: 6.3 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 4985mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமராவுடன் இந்த பிக்சல் 11 கிடைக்க இருக்கிறது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ அம்சங்கள்: 6.3 இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது. 4850mAh பேட்டரி கிடைக்கிறது. 30W சார்ஜிங் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டல் 2 கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி டெலிபோட்டோ உள்ளது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் 6.8 இன்ச் சூப்பர் அக்டுவா ஓஎல்இடி டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. 5115mAh பேட்டரி, 45W சார்ஜிங் உள்ளது. பிக்சல் 11 ப்ரோ போல்டு மாடலில் 8 இன்ச் மெயின் டிஸ்பிளே, 6.4 இன்ச் கவர் டிஸ்பிளே உள்ளது. 4806mAh பேட்டரி, 48 எம்பி மெயின் + 10.5 எம்பி அல்ட்ரா வைடு + 10.8 எம்பி பெரிஸ்கோப் உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 11 Series Price in India Revealed Hours Ahead of Launch Check Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X