Home
Mobile

Google வெச்சான் பாரு.. 4985mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. G6 சிப்செட்.. பிக்சல் 11 சீரிஸ் விலை எப்படி?

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் (Google Pixel 11 Series) மாடல்களின் வெளியீடு நெருங்கிவிட்டதால், முக்கிய பீச்சர்கள் கசிந்து வருகின்றன. இப்போது, பேட்டரி கேபாசிட்டியுடன் விலை விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. கூகுள் பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் ஆரம்ப விலைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதனால், விலை சற்று அதிகமாக தோன்றும்.

கூகுள் நிறுவனத்தின் மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வு வருகிற ஆகஸ்டர் 12 ஆம் தேதியில் நடக்கிறது. நியூயார்க் நகரத்தில் நடக்கும் இந்த நிகழ்வில் கூகுள் பிக்சல் 11 சீரிஸ் (Google Pixel 11 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11), கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro) மற்றும் கூகுள் பிக்சல் ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 Pro XL) மாடல்கள் வருகின்றன.

Google வெச்சான் பாரு.. 4985mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. G6 சிப்செட்!

இந்த மாடல்களின் விலை மற்றும் பேட்டரி விவரங்கள் கசிந்துள்ளன. கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 1,12,000 பட்ஜெட்டில் இருக்கிறது. கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.79,999 பட்ஜெட்டில் இருந்தது. கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.1,37,000 பட்ஜெட்டில் இருக்கிறது.

முன்னதாக வெளியான கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆக இருந்தது. கூகுள் பிக்சல் ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 1,65,000ஆக இருக்கிறது. முன்னதாக கிடைத்த கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,24,999 ஆக இருந்தது.

ஆகவே, கூடுதல விலை மட்டுமல்லாமல், அதிக விலைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் லெவல் அப்கிரேட்கள் இருக்கும். இந்த கூகுள் பிக்சல் 11 சீரிஸ் மாடல்களின் பேட்டரியை பார்க்கையில், பிக்சல் 11 ஸ்மார்ட்போனில் 4985mAh பேட்டரி மற்றும் பிக்சல் 11 ப்ரோ மாடலில் 4850mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.

மேலும், கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5115mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. முன்னதாக வெளியான மாடல்களுடன் ஒப்பிடுகையில், கூகுள் பிக்சல் 10 மாடலில் 4970mAh பேட்டரி கிடைத்தது. கூகுள் பிக்சல் 10 ப்ரோ மாடலில் 4870mAh பேட்டரி கிடைத்தது. கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் 5200mAh கிடைத்திருந்தது. ஆகவே, அப்கிரேட்கள் இருக்கின்றன.

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அம்சங்கள்: ஏற்கனவே வெளியான 10 சீரிஸ் மாடல்களில் கிடைத்த பீச்சர்களை இப்போது பார்க்க வேண்டும். ஏனென்றால், இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களே பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் கிடைக்கும். பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, டென்சார் ஜி5 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைத்து.

48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.5 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. பிக்சல் ப்ரோ மாடலில் 6.3 இன்ச் டிஸ்பிளே மற்றும் ப்ரோ எக்ஸ்எல் மாடலில் 6.8 இன்ச் டிஸ்பிளே கிடைத்தது. டென்சார் ஜி5 சிப்செட் வருகிறது. 50 எம்பி மெயின் + 48 எம்பி அல்ட்ராவைடு + 48 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. ஆகவே, பிக்சல் 11 சீரிஸ் மாடல்களில் டென்சார் ஜி6 சிப்செட் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Google Pixel 11 Series Price Battery Capacities Leaked Ahead Of Launch Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X