Home
Mobile

வாங்குனா இப்படிவொரு போன் வாங்கனும்.. OLED டிஸ்பிளே.. 4985mAh பேட்டரி.. ஆக.12-க்கு அப்புறம் இதுதான் நிக்கும்!

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் (Google Pixel 11 Series) மாடல்களுக்கு ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் காத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, விலை விவரங்கள் கசிந்துவிட்டன. பீச்சர்களும் படிப்படியாக கசிந்து வருகின்றன. ஆகவே, இதுவரையில் கூகுள் பிக்சல் 11 சீரிஸ் குறித்த வெளியான விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நியூயார்க் நகரில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நடக்கும் மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வில் கூகுள் பிக்சல் 11 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதே நாளில் ப்ரீ-ஆர்டர் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியீடு மற்றும் ப்ரீ-ஆர்டர் தொடங்க இருக்கிறது. எந்தெந்த மாடல்கள் வெளியாகும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

வாங்குனா இப்படிவொரு போன் வாங்கனும்.. OLED டிஸ்பிளே.. 4985mAh பேட்டரி!

இருப்பினும், கூகுள் பிக்சல் 10 சீரிஸ் வெளியாகும்போது, அதில் கிடைத்த மாடல்களை வைத்து பார்க்கையில் கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11), கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro), கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு (Google Pixel 11 Pro Fold) ஆகிய மாடல்களை எதிர்பார்க்கலாம்.

இதற்கு ஏற்ப விலை விவரங்களும் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. ஆகவே, கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,09,849ஆகவும், கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,31,840ஆகவும், கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மாடலின் விலை ரூ.1,53,832ஆகவும் இருக்கலாம். கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,19,901ஆக இருக்கலாம்.

இது யூரோ அடிப்படையில் கசிந்த விலைகளாக இருக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டில் விலையில் மாற்றம் இருக்கும். அதேபோல அறிமுக சலுகையில் கம்மியாகவும் கிடைக்கும். இந்த விலைகளுக்கு 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் கிடைக்கும். ஆகவே, அதிக ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்களின் விலை கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த மாடல்களின் வெளியீட்டுக்கு பிறகு பட்ஜெட் பிரியர்கள் விரும்பும்படி கூகுள் பிக்சல் 11ஏ (Google Pixel 11a) ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்களும் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆகவே, இந்த பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.

இந்த பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போனில் கூகுள் டென்சார் ஜி6 (Google Tensor G6) சிப்செட் கிடைக்க இருக்கிறது. டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M3 Security Chip) மற்றும் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட இருக்கிறது. 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த பிக்சல் 11ஏ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், 3350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்க உள்ளது. 4870mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனில் 4985mAh பேட்டரி மற்றும் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. கூகுள் டென்சார் ஜி6 சிப்செட் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel 11 Series Pre-order From August 12 in New York City Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X