Home
Mobile

அல்லு சில்லு பறக்க வந்தாச்சு.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5115mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 11 Pro XL) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. வழக்கமாக கிடைக்கும் 48 எம்பி கேமராவை தவிர்த்து 50 எம்பி மெயின் கேமராவுடன் கிடைக்கிறது. புதிய கூகுள் டென்சார் ஜி6 (Google Tensor G6) கொடுத்து இருக்கிறது. இந்த பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மாடலின் முழு விவரங்கள் இதோ.

இந்திய உள்பட குளோபல் மார்கெட்டில் கூகுள் பிக்சல் 11 சீரிஸ் (Google Pixel 11 Series) வெளியாகி இருக்கிறது. இதில் கூகுள் பிக்சல் 11, கூகுள் பிக்சல் 11 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் வெளியாகி இருக்கின்றன. கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு மாடலும் வந்துள்ளது. ஆனால், பிரீமியம் கஸ்டமர்களை பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் தட்டித்தூக்கி இருக்கிறது.

அல்லு சில்லு பறக்க வந்தாச்சு.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. மாடல்?

கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் அம்சங்கள் (Google Pixel 11 Pro XL Specifications): ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்ட கூகுள் டென்சார் ஜி6 (Google Tensor G6) சிப்செட் கிடைக்கிறது. டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M3 Security Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6.8 இன்ச் (1344 x 2992 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு குவாட்எச்டிபிளஸ் (QHD+) ரெசொலுஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நானோ சிம் மற்றும் ஈசிம் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

இதில் வழக்கம்போல ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எல்டிஏஎப (LDAF) சப்போர்ட் கிடைக்கிறது. 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதில் மேக்ரோ ஆப்ஷன் கிடைக்கிறகது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 100X ப்ரோ ரெஸ் ஜூமிங் கொண்ட 48 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 5X இன்-சென்சார் ஜூமிங் கிடைக்கிறது.

சினிமாடிக் பிளர் (Cinematic Blur) மற்றும் 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8K 30FPS வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 42 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கும் ஆட்டோ போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) கிடைக்கிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5115mAh பேட்டரியை இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், 25W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இப்போது, விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,34,999 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,49,999 ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட், கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் குறிப்பிட்ட ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. கேன்யான் (Canyon), ஃபோக் (Fog), ஆலிவ் (Olive) மற்றும் அப்சிடியன் (Obsidian) கலர்களில் கிடைக்கிறது.

கூகுள் இந்தியா ஸ்டோர் வழியாக வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. எச்டிஎம்ஐ பேங்க் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும். 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையை கொடுக்கிறது. ரூ,9,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரீமியம் கஸ்டமர்களுக்கு ஏற்ற மாடலாகும்.

Best Mobiles in India

English summary
Google Pixel 11 Pro XL With 5115mAh Battery 50MP Camera Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X