இதுதான் புதிய கூகுள் பிக்சல் போன்.. ஆண்ட்ராய்டு 17 OS.. OLED டிஸ்பிளே.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனம் விரைவில் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 Pro XL) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மாதங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த போனின கேமரா பார் பெரியதாகவும், மெல்லியதாகவும் இருப்பதுடன், பிக்சல் 11 ப்ரோவைப் போலவே கருப்பு நிறத்தில் உள்ளது. அதேபோல் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் இந்த புதிய கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் உள்ளது. அதுவும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் அம்சங்கள் (Google Pixel 11 Pro XL Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
டென்சர் ஜி6 பிராசஸர் (Tensor G6 processor) மற்றும் 7-கோர் சிப்செட்( 7-core chipset) வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M3 security chip) வசதியும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் உள்ளது. ஆண்ட்ராய்டு 17 (Android 17) இயங்குதள வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய கூகுள் பிக்சல் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற பல வசதிகள் இந்த போனில் உள்ளன.

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 100X ஜூம் ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய கூகுள் போனில் உள்ளன.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனில் பெரிய பேட்டரி வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும்.
Photo Credit: Android Headlines


Click it and Unblock the Notifications








