Home
Mobile

தலைவன் வேற ரகம்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. 4806mAh பேட்டரி.. Google Pixel 11 Pro Fold அறிமுகம்!

இந்திய மார்கெட்டில் கூகுள் நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு (Google Pixel 11 Pro Fold) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரையில் வெளியான பிக்சல் மாடல்களிலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. இதற்கு ஏற்ப பீச்சர்களும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன. கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு மாடலின் விவரங்கள் இதோ.

டிசைனை பொறுத்தவரையில், விசுவல் நோட்டிபிகேஷன் கொடுக்க ஹைலைட் (HiLight) கொண்டுவரப்பட்டுள்ளது. ரியர் கேமரா செட்டப்பில் இந்த லைட் கிடைக்கிறது. இதுவொரு மல்டி-ஃபங்ஷ்னல் எல்இடி நோட்டிபிகேஷன் சிஸ்டம் (Multi-functional LED Notification System) போக சாப்ட்வேர் லெவலில் கூகுள் டென்சார் G6 (Google Tensor G6) அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. ஏஐ இன்டிகிரேஷன் இருக்கிறது.

தலைவன் வேற ரகம்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. எந்த மாடல்?

சைன்-டு-டெக்ஸ்ட் டிரான்லேஷன் (Sign-to-Text Translation), மல்டிடாஸ்கிங் என்ஹான்ஸ்மெண்ட் (Multitasking Enhancements), ஜெமினி ஏஐ அசிஸ்டன்ஸ், மேட் யூ லுக், லைவ் டிராஸ்கிரிப் (Live Transcribe) உள்ளிட்ட சிஸ்டம் லெவல் ஏஐ இன்டிகிரேஷனை பார்க்க முடிகிறது. கேமராவின் மெகா பிக்சலில் பெரிய மாற்றம் இல்லை. பேட்டரி பேக்கப் கொஞ்சம் என்ஹான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு அம்சங்கள் (Google Pixel 11 Pro Fold Specifications): 8 இன்ச் (2076 x 2152 பிக்சல்கள்) ஓஎல்இடி மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் எச்டிஆர் பிரைட்னஸ் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அல்ட்ரா தின் கிளாஸ் (Ultra Thin Glass) புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது.

6.5 இன்ச் (1080 x 2342 பிக்சல்கள்) ஓஎல்இடி கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அல்ட்ரா-டியூரபிள் கிளாஸ் செராமிக் கவர் கிளாஸ் கிடைக்கிறது. கூகுள் டென்சார் ஜி6 (Google Tensor G6) மற்றும் டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் (Titan M3 Security Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால், இந்திய மார்கெட்டில் வெளியான முதலாவது ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மாடலாக கூகுள் பிக்சல் 11 சீரிஸ் இருக்கிறது. இதில் போல்டு மாடலில் முதலாவது மாடலாக கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு இருக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

10.5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெலிபைசேஷன், 30X சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 10 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4806mAh பேட்டரி கிடைக்கிறது. போல்டு செய்தால் 10.1 எம்எம் தடிமன் இருக்கிறது. அன்போல்டு செய்தால் வெறும் 5 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,86,999 ஆக இருக்கிறது. ஆலிவ் கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ப்ரீ-ஆர்டருக்கு வந்துவிட்டது.

கூகுள் இந்தியா ஸ்டோர், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையில் ரூ.10,000 டிஸ்கவுண்ட் போக கிடைக்க இருக்கிறது. 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel 11 Pro Fold Launched in India Sale From August 20 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X