Home
Mobile

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. 4806mAh பேட்டரி.. எந்த மாடல்?

அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் பிரீமியம் காட்டும்படி கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு (Google Pixel 11 Pro Fold) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த போல்டு ஸ்மார்ட்போனின் டிசைனை கூகுள் நிறுவனம் டீசர் வழியாக உறுதி செய்துள்ளது. பீச்சர்கள், விலை எப்படி இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி கூகுள் பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் அதிகப்படியான விலை மற்றும் பீச்சர்களுடன் கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இப்போது, டிசைனை கூகுள் நிறுவனமே, எக்ஸ் தளம் வழியாக உறுதி செய்துள்ளது.

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. மாடல்?

ஸ்குவார் ஷேப்டு கேமரா டிசைன், மெட்டாலிக் ஃபிரேம் மற்றும் கிரீன் ஷேட் கொண்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்களை பார்க்க முடியவில்லை. மெயின் டிஸ்பிளே பெரிதாக இருக்கிறது. கிட்டத்தட்ட டேப் அனுபவத்தை எதிர்பார்க்கலாம். அதே போல அன்போல்டு செய்தால், அல்ட்ரா ஸ்லிம் பாடியை எதிர்பார்க்க முடியும். பீச்சர்கள் எப்படி இருக்கும்?

கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு அம்சங்கள் (Google Pixel 11 Pro Fold Specifications): 8 இன்ச் போல்டபிள் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 6.4 இன்ச் ஓஎல்இடி கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டென்சார் ஜி6 (Tensor G6) சிப்செட் கிடைக்கிறது. டைட்டன் எம்3 கோ-சிப்செட் உள்ளது.

பிரீமியம் மாடலாக இருப்பதால், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரியை கொடுக்க இருக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா + 10.5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10.8 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொடுத்துள்ளது. டெலிபோட்டோவில் 5X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது.

மேலும், 10 எம்பி டூயல் செல்பீ கேமராவை இந்த கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. 4806mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேக்கர் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு கியூஐ2 வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்களுடன் ரூ.1.81 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்டு மட்டுமல்லாமல், கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11), கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro), கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 XL) ஸ்மார்ட்போன்களும் வெளியாக இருக்கின்றன. ஆகஸ்ட் 12 ஆம் தேதி ப்ரீ-ஆர்டருக்கும் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, இந்தியாவிலும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் தளங்களில் ப்ரீ-ஆர்டர் தொடங்கும். ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ பீச்சர்களுக்கு போட்டியாக பல்வேறு பீச்சர்கள் இந்த பிக்சல் 11 சீரிஸ் மாடல்களில் கொடுக்கப்பட இருப்பதாக ஸ்மார்ட்போன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ஜெமினி திட்டங்கள் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இலவசமாகவும் கொடுக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
Google Pixel 11 Pro Fold Design Revealed Ahead Of Launch Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X