Home
Mobile

பிச்சு உதறிய Pixel.. ஆக.12-க்கு வெயிட்டிங் மோட்.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 4985mAh பேட்டரி.. விலை எப்படி?

கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பிரீமியம் மாடல்களான கூகுள் பிக்சல் 11 சீரிஸ் (Google Pixel 11 Series) அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்பாகவே முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்துள்ளன. இதில் கூகுள் பிக்சல் 11 மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ மாடல்கள் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதியில் கூகுள் பிக்சல் 11 சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் அதே தேதியில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. கூகுள் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். இருப்பினும், விலை மற்றும் பீச்சர்கள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும்படி அவை மார்கெட்டில் கசிந்துவிட்டன.

பிச்சு உதறிய Pixel.. ஆக.12-க்கு வெயிட்டிங் மோட்.. OLED டிஸ்பிளே!

கூகுள் பிக்சல் 11 அம்சங்கள் (Google Pixel 11 Specifications): 6.3 இன்ச் (2424 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது. கூகுள் டென்சார் ஜி6 (Tensor G6) சிப்செட் மற்றும் டைட்டன் எம்3 (Titan M3) செக்யூரிட்டி சிப்செட் கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10.5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கியூஐ1 வயர்லெஸ் சார்ஜிங் (Qi2 Wireless Charging) சப்போர்ட் கொண்ட 4985mAh பேட்டரியை கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் அமெரிக்கா விலை 899 டாலர்களாக இருக்கலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் ரூ.86,000 பட்ஜெட்டாக இருக்கிறது. ஆனால், இங்கு வெளியாகும்போது விலையில் மாற்றம் இருக்கும். கூடுதல் விலையாக இருக்கலாம்.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ அம்சங்கள் (Google Pixel 11 Pro Specifications): 6.3 இன்ச் (2856 x 1280 பிக்சல்கள்) எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டென்சார் ஜி6 சிப்செட் மற்றும் டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் கொண்டுள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 48 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 120X ப்ரோ ஜூம் மற்றும் 42 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4850mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது. கியூஐ2 வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ப்ரோ மாடலின் அமெரிக்க விலை 1,099 டாலர்களாக இருக்கப்போகிறது.

இந்திய மதிப்பில் ரூ.1,04,552 ஆக இருக்கிறது. முந்தைய மாடலை போலவே இதன் விலையும் இந்தியாவில் கூடுதலாக இருக்கும். இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.10,000 மேல் மலிவாக கிடைக்கும். ப்ரீ-ஆர்டருக்கு ஏற்கனவே வந்துவிட்டது. குளோபல் மார்கெட்டில் வெளியாகும் அதே தேதியில் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது. ஆகவே, விலை விவரமும் தெரியவந்துவிடும்.

Best Mobiles in India

English summary
Google Pixel 11 Pixel 11 Pro Full Specifications Leaked Ahead Of Launch Check Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X