அறிமுகமானது புதிய கூகுள் பிக்சல் 11 போன்.. IP68 ரேட்டிங்.. 48எம்பி கேமரா.. என்ன விலை?
கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது பிக்சல் 11 போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 11 அம்சங்கள் (Google Pixel 11 specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த கூகுள் பிக்சல்ஸ் 11 போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2424 பிக்சல்ஸ், 3000 நிட்ஸ் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் கூகுள் டென்சர் ஜி6 பிராசஸர் (Google Tensor G6 processor) உடன் கூகுள் பிக்சல் 11 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக டைட்டன் எம்3 செக்யூரிட்டி சிப் வசதியும் இந்த மாடலில் உள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மூலம் கூகுள் பிக்சல் 11 மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
48எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன். HDR ரெக்கார்டிங், சினிமாட்டிக் ப்ளர், 20x வரை சூப்பர் ரெஸ் ஜூம், 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10.5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்றவசதிகள் இந்த கூகுள் பிக்சல் போனில் உள்ளன.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது கூகுள் பிக்சல் 11 போன். மேலும் 5ஜி எஸ்ஏ/என்ஏ, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6LE, அல்ட்ரா-வைட்பேண்ட் சிப், புளூடூத் 6 எல்இ, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
4985எம்ஏஎச் பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 25W Qi2.2 பிக்சல்ஸ்நாப் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

கூகுள் பிக்சல் 11 விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட பிக்சல் 11 போனின் விலை ரூ.89,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட பிக்சல் 11 போனின் விலை ரூ.1,04,999-ஆக உள்ளது.
குறிப்பாக இந்த பிக்சல் 11 போன் கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஆர்டர் செய்யக் கிடைக்கின்றன. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகைள பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். Pistachio, ஹைபிஸ்கஸ் (Hibiscus), ஃப்ராஸ்ட் (Frost) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications