புது போனுக்கு அவசரப்பட்டு இதை விட்ராதீங்க.. AMOLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?
புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்ட பிக்சல் பிரியர்கள் ஓரிரு மாதங்கள் காத்திருந்தால் லேட்டஸ்ட் பீச்சர்கள் மற்றும் ஓஎஸ் அப்கிரேட்களுடன் கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) வாங்கிவிடலாம். ஏனென்றால், இந்த பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அமோலெட் டிஸ்பிளே, 48 ஜிபி கேமரா, டென்சார் ஜி4 சிப்செட் கொண்டுள்ளது.
இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10), கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro) மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL) ஆகிய மாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும், இந்த மாடல்களைவிட மலிவான விலைக்கு கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதால், இதற்கு பிக்சல் பிரியர்கள் காத்திருக்கிறார்கள்.

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே வெளியாகிவிட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு முடியும் வரையில் பிக்சல் 10ஏ மாடலின் அறிமுகம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதனால், பிக்சல் பிரியர்கள் கூகுள் பிக்சல் 10 மாடலையே வாங்கிவிடலாமா என்று நினைக்க தொடங்கிவிட்டனர். இவர்களை அப்படியே வெயிட்டிங் மோடில் போடும்படி டைம்லைன் வந்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நடுவில் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், அப்சிடியன் (Obsidian), பெர்ரி (Berry), ஃபோக் (Fog) மற்றும் லாவண்டர் (Lavender) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் கிடைக்க உள்ளதும் கசிந்த தகவல் வழியாக தெரியவந்துள்ளது.
முன்னதாக கூகுள் டென்சார் ஜி5 3என்எம் (Google Tensor G5 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதே சிப்செட் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனிலும் வந்தது. ஆகவே, விலையில் பெரிதாக மாற்றம் இருக்காதே என்று பிக்சல் பிரியர்கள் நினைத்தனர். ஆனால், கூகுள் டென்சார் ஜி4 சிப்செட் இதில் வர இருப்பது கசிந்துள்ளது.
ஆகவே, பிக்சல் 10 ஸ்மார்ட்போனை விட மலிவான விலைக்கு லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்கள் மற்றும் அதிக ஓஎஸ் அப்கிரேட்களுடன் இந்த ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இந்த பிப்ரவரி டைம்லைன் மற்றும் கலர், ஸ்டோரேஜ் விவரங்களுக்கு முன்னதாகவே டிஸ்பிளே, பேட்டரி, கேமரா மற்றும் ரேம் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதை பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a Specifications): 6.28 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது. 48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவும் இதில் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் கிடைக்க உள்ளது. மேலும், 5100 mAh பேட்டரியை கொடுக்க உள்ளது. இந்திய மார்கெட்டில் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999 ஆக இருக்கிறது. ஆகவே, இதைவிட மலிவான விலைக்கு பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். சிப்செட் தவிர மற்ற பீச்சர்கள் அப்கிரேடாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








