இதுக்குத்தானே தவம் கிடைந்தோம்.. பிப்.18 குறிச்சாச்சு.. OLED டிஸ்பிளே.. புது Pixel ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
கூகுள் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) மாடலின் ப்ரீ-ஆர்டர் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்பட குளோபல் மார்கெட்டில் ப்ரீ-ஆர்டருக்கு வர உள்ளது. ஓஎல்இடி டிஸ்பிளே, 5100mAh பேட்டரி, 48 எம்பி கேமரா உள்ளிட்ட பீச்சர்களும் கசிந்துள்ளன.
வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி ப்ரீ-ஆர்டர் தொடங்குகிறது. கூகுள் ஸ்டோர் வழியாக ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து சைன்-அப் செய்தால் ப்ரீ-ஆர்டர் சலுகைகள் இமெயில் வழியாக தெரிவிக்கப்பட உள்ளது. ஏ சீரிஸ் மாடல்களிலேயே அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் இருக்கப்போகிறது.

ஜெமினி பில்ட்-இன் ஏஐ அசிஸ்டன்ட் (Gemini Built-in AI Assistant) கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது. ப்ளூ (Blue) கலரில் கிடைக்க உள்ளது. இந்த விவரங்களை மட்டுமே கூகுள் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன.
கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a Specifications): கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்பை (Titan M2 Security Chip) இந்த பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கின்றன.
7 வருடங்களுக்கு செக்யூரிட்டி மற்றும் பீச்சர் டிராப் அப்டேட்களையும் கொடுக்க உள்ளது. 6.2 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் சிம் (Dual SIM) சப்போர்ட் உள்ளது.
நானோ (Nano) மற்றும் ஈசிம் (eSIM) சப்போர்ட் கிடைத்துள்ளது. 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), பிடிஏஎப் (PDAF) போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 10 மாடலில் கிடைக்க ஏஐ பீச்சர்கள் இதிலும் கிடைக்கும்.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K ரெசொலூஷன் ரெக்கார்டிங் கொண்ட 13 எம்பி செல்பீ கேமராவை இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது.
5100mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 2 மைக்ரோபோன்களை (Microphones) கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6இ மற்றும் ப்ளூடூத் 6 கிடைக்கிறது.
500 அமெரிக்க டாலர்களாக விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.45,000 பட்ஜெட்டில் இருக்கும். பிப்ரவரி 18ஆம் தேதிக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்படும். ஏனென்றால், டிசைன் உறுதியாகிவிட்டது. கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை விட மலிவான விலைக்கு அதே பீச்சர்கள் வேண்டுமானால், இது பக்காவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








