ரூ.6000 எகிறிய விலை.. 5100mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. OIS கேமரா.. Google பிக்சல் 10ஏ விலை உயர்வு!
இந்திய மார்கெட்டில் கடந்த சில மாதங்களாகவே ஸ்மார்ட்போன்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பிரீமியம் மாடல்களை களமிறக்கும் நிறுவனங்கள் முதல் விவோ, ரியல்மி உள்ளிட்ட பட்ஜெட் மாடல்களை களமிறக்கும் நிறுவனங்கள் வரையில் விலை உயர்வு செய்யப்பட்டு வருகிறது. இப்போது, கூகுள் நிறுவனமும் விலை உயர்வை கையில் எடுத்துள்ளது.
கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,000 உயர்த்து இருக்கிறது. இந்தியாவில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகியபோது, ரூ.49,999 விலைக்கு கிடைத்தது. இப்போது, ரூ.55,999 விலைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.6,000 விலை அதிகமாக இருக்கிறது. இருப்பினும், பேங்க் டிஸ்கவுண்ட் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கின்றன.

அப்சிடியன் (Obsidian), ஃபோக் (Fog), லாவெண்டர் (Lavender) மற்றும் பெர்ரி (Berry) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக 7 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். இதனாலேயே பல வருடங்களுக்கு இந்த பிக்சல் மாடல்களுக்கு மவுசு நீடிக்கிறது.
கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a Specifications): 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) கிடைக்கிறது.
கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் கொண்ட மாடலாக இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவொரு ஈசிம் சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. நானோ சிம் சிலாட் உள்ளது.
48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா செட்டப்பை இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. பிடிஏஎப் (PDAF) போகஸ் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரியுடன் இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 9 எம்எம் தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 2 மைக்ரோபோன்கள் உள்ளன. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ. 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6இ மற்றும் ப்ளூடூத் 6.0 கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
