தூக்குங்குடா அந்த தங்கத்த.. 5100mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. பிப்.18 க்கு அப்புறம் இதுதான் டாப்.. எந்த மாடல்?
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) ஸ்மார்ட்போனின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. டிசைன் மற்றும் கலர் விவரங்களை தவிர மற்ற பீச்சர்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், ஈயூ எனர்ஜி சர்டிபிகேஷனுக்கு (EU Energy Certification) சென்றுள்ளதால், பேட்டரி கேபாசிட்டி உறுதி செய்யப்பட்டுவிட்டது. பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை போலவே எதிர்பார்க்கலாம். இந்த பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்ப்போம்.
வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியா உள்பட குளோபல் மார்கெட்களிலும் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பிப்ரவரி 18ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து சைன்-அப் செய்து சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

இந்த ப்ரீ ஆர்டர் விவரங்களுடன் ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் (Gemini AI Assistant), டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் ப்ளூ (Blue) கலரில் கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், முழு பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. இதில் பேட்டரி கேபாசிட்டி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஏனென்றால், ஈயூ எனர்ஜி சர்டிபிகேஷனுக்கு கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் சென்றுள்ளதால், பேட்டரி கேபாசிட்டி தெரியவந்துள்ளது. கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் கிடைத்ததை போலவே இதிலும் 5100mAh பேட்டரி கிடைக்க உள்ளது. 53 மணி நேரம் மற்றும் 14 நிமிடங்களுக்கு பேக்கப் கொடுக்க உள்ளது. 1000 சார்ஜிங் சைக்கிள் கிடைக்கிறது.

இதற்கு பிறகும் 80 சதவீத கேபாசிட்டியுடன் தொடர்ந்து பேக்கப் எதிர்பார்க்கலாம். இந்த விவரங்கள் மட்டுமே ஈயூ எனர்ஜி சர்டிபிகேஷன் வழியாக தெரியவந்துள்ளது. இந்த பேட்டரி விவரங்களும் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்த விவரங்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, கசிந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a Specifications): 6.2 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் (HRD) கொடுக்கப்பட உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது.
முந்தைய மாடல்களை போலவே 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். மேலும், 7 வருடங்களுக்கு பீச்சர் டிராப் அப்டேட்களும் கிடைக்கிறது. டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப்புடன் கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.
48 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் 5100mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது. ரூ.45,000 முதல் ரூ.50,000 பட்ஜெட்டில் இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
முன்னதாக வெளியான கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 49,999 பட்ஜெட்டில் இருந்தது. இந்த பட்ஜெட்டுக்கு 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, கூகுள் டென்சார் ஜி4 சிப்செட் கிடைக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 5100mAh பேட்டரி மற்றும் 23W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.


Click it and Unblock the Notifications








