மட்ட ரேட்டுக்கு வருமோ.. Google பிக்சல் 10ஏ-க்கு அதே டென்சார் G4.. டெலிபோட்டோ இல்ல.. மேஜிக் கியூ இல்ல!
இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. இதைவிட கம்மியான விலைக்கு கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) வெளியாகும் என்பது பிக்சல் பிரியர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், இப்போது, கசிந்த பீச்சர்களை பார்த்தால், நினைத்ததைவிட மலிவான விலைக்கு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், முக்கிய பீச்சர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 9 சீரிஸ் மாடல்கள் வெளியான பிறகு, அதைவிட மலிவான விலைக்கு என்ட்ரீ-லெவல் மடாலாக கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் வெளியானது. இந்த மாடல்களின் விலையில் மாற்றங்கள் இருந்தாலும், பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் கிடைத்த அதே டென்சார் ஜி4 சிப்செட் ஆனது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனிலும் கிடைத்தது.

இதேபோல கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் கிடைத்த டென்சார் ஜி5 சிப்செட் ஆனது, அடுத்து வர இருக்கும் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை அப்படியே மறந்துபோகும்படி மிஸ்டிக் லீக்ஸ் (Mystic Leaks) மூலம் கசிந்த பீச்சர்கள் செய்துவிட்டன. முக்கிய பீச்சர்கள் பல கிடைக்காது என்பதை அது காட்டுகிறது.
அதாவது, கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனில் டென்சார் ஜி4 (Tensor G4) சிப்செட் மட்டுமே கிடைக்க இருப்பதை அது தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கூகுள் பிக்சல் 10 கிடைத்த டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) இதில் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமே கிடைக்க இருப்பது தெரிகிறது.
மேலும், பிரீமியம் ஏஐ பீச்சரான மேஜிக் கியூ (Magic Cue) பீச்சரும் இதில் கிடைக்காது என்பதை அந்த லீக் மூலம் தெரியவருகிறது. ஆகவே, கிட்டத்தட்ட பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் கிடைத்த பெரும்பாலான பீச்சர்களுடன் கிடைக்கப் போகிறது. இதனால், பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு பதிலாக பிக்சல் 10ஏ மாடலை வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்கில் இருக்கின்றனர்.
இருப்பினும், கூகுள் நிறுவனம் இதை உறுதிப்படுத்தும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனை அடுத்தாண்டு எதிர்பார்க்கலாம். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. சிப்செட் மற்றும் பீச்சர்கள் பழைய வெர்ஷனாக இருப்பதால், மேலும் கம்மியான விலைக்கு இந்த ஸ்மார்ட்போனை எதிர்பார்க்க முடியும்.
இப்போது, பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்களை பார்க்கலாம். அப்போதுதான் சிப்செட், டெலிபோட்டோ மற்றும் மேஜிக் கியூ தவிர மற்ற பீச்சர்கள் எப்படி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். டென்சார் ஜி5 சிப்செட்டுடன் மேஜிக் கியூ மட்டுமல்லாமல், ஆட்டோ பெஸ்ட் டேக் (Auto Best Take), பிக்சல் ஜோர்னல் ஆப் (Pixel Journal App) இதில் கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் கொண்ட 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் 12 ஜிபி ரேம் கிடைக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.
10.8 எம்பி டெலிபோட்டோ மற்றும் 10.5 செல்பீ கேமரா வருகிறது. 4970mAh பேட்டரி, 29W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இதில் பெரும்பாலான பீச்சர்கள் பிக்சல் 9ஏ மாடலில் இடம்பெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications