அடுத்த கூகுள் 5ஜி ஸ்மார்ட்போன் ரெடி.. 48எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. டென்சார் ஜி4 சிப்செட் .. எந்த மாடல்?
கூகுள் நிறுவனம் அடுத்து பட்ஜெட் விலையில் கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a Specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (full-HD+ AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த கூகுள் பிக்சல் போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
டென்சார் ஜி4 (Tensor G4) சிப்செட் உடன் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த பிக்சல் ஸ்மார்ட்போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

5100mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் ரூ.44,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: tomsguide, Future


Click it and Unblock the Notifications








