Home
Mobile

யாருகிட்ட.. Apple-ன் ஆரஞ்சு கலர் iPhone-க்கு ஆப்பு வைத்த Google.. பளபளக்கும் புது Pixel போன்!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 17 சீரீஸில் மிகவும் ஹைலைட் ஆன அல்லது மிகவும் கவர்ந்திழுக்கும் கலர் ஆப்ஷன் எதுவென்று கேட்டால்.. பலரும் ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மாடலின் ஆரஞ்சு கலர் ஆப்ஷனை தான் கூறுவார்கள். தற்போது கூகுள் நிறுவனமும் அந்த கலரில் "ஒரு கண் வைத்துள்ளது".

கூகுள் (Google) ஏற்கனவே தனது அடுத்த மிட்-ரேன்ஜ் பிக்சல் ஸ்மார்ட்போனுக்கான அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. அது கூகுள் பிக்சல் 10ஏ (Pixel 10a) ஸ்மார்ட்போன் ஆகும். இது வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதி உலகளவில் மற்றும் இந்தியாவில் ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கவுள்ளது.

யாருகிட்ட.. Apple-ன் ஆரஞ்சு கலர் iPhone-க்கு ஆப்பு வைத்த Google!

மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே இது கூகு ள் நிறுவனத்தின் பிளாக்ஷிப் பிக்சல் 10 சீரிஸின் கீழ் அறிமுகமாகும் 'மலிவு விலை' மாடல் ஆகும். அதாவது ஒரே மாதிரியான வடிவமைப்பை பெறும் ஆனால் சற்றே குறைக்கப்பட்டஅம்சங்களை கொண்டிருக்கும். இப்போது வரை கூகுள் நிறுவனம் ஆனது பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் ஒரே ஒரு கலர் ஆப்ஷனை மட்டுமே டீசர் செய்துள்ளது

இதற்கிடையில் ஆன்லைனில் லீக் ஆகியுள்ள சில ரெண்டர்கள் (புகைப்படங்கள்) பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் ஆனது 4 கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதை வெளிப்படுத்தி உள்ளன: அப்சிடியன், ஃபாக், பெர்ரி மற்றும் லாவெண்டர். அப்சிடியன் - ஒரு "பழக்கமான" ஒரு கலர் ஆப்ஷன் ஆகும். இது கூகுளின் ஒரு பிரதான கலர் ஆப்ஷன் ஆகும்.

அதே நேரத்தில், கூகுள் நிறுவனம் ஏற்கனவே லாவெண்டர் கலர் ஆப்ஷனை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி விட்டது. இது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் ஐரிஸ் கலர் ஆப்ஷனை விட சற்றே டார்க் ஆக உள்ளது. மூன்றாவதாக உள்ள ஃபாக் - ஒரு வெளிர் பச்சை நிறமாகவும், முந்தைய சீரிஸில் இருந்த போர்சிலின் கலருக்கான மாற்றாக தெரிகிறது

நான்காவது மற்றும் கடைசி கலர் ஆப்ஷன் - மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. அது பெர்ரி கலர் ஆப்ஷன். இது தான் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் சுவாரஸ்யமான கலர் ஆப்ஷனாக இருக்க போகிறது. இது பிக்சல் சீரிஸின் மிகவும் பிரபலமான 'பியோனி' கலர் ஆப்ஷனுக்கு பதிலாக அடர்-பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமாக தெரிகிறது, சற்று ஆரஞ்சு நிறமாகவும் இருக்கிறது. அதாவது சற்றே ஐபோன் 17 ப்ரோவின் ஆரஞ்சு நிறத்தை போலவே உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஆப்பிளை நேரடியாக தாக்குவது போல் தெரிந்தாலும், ஆண்ட்ராய்டில் இருந்து அம்சங்களை ஈர்ப்பதில் ஆப்பிள் ஏற்கனவே ஒரு பெரிய கில்லாடி என்பதால்.. இதையெல்லாம் ஒரு மேட்டர் ஆகவே அது எடுத்துகொள்ளாது. ஆனால் ஒட்டுமொத்தமாக, கூகுள் அதன் பிக்சல் 10ஏ மாடலுக்கான கலர் ஆப்ஷனைகளை வேற லெவலில் அப்டேட் செய்வதாக தெரிகிறது.

கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 119.7-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர்கொண்ட 13-மெகாபிக்சல் செல்பீ கேமரா

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10a New Berry colour option looks similar like Famous iPhone 17 Pro Orange Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X