Home
Mobile

சாரே கொல மாஸ்.. அறிமுகமானது புது கூகுள் 5ஜி போன்.. 7 வருட OS அப்டேட்.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஐபி68 ரேட்டிங், ஒஎல்இடி டிஸ்பிளே, 48எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது பிக்சல் 10ஏ. இப்போது புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 10ஏ அம்சங்கள் (Google Pixel 10a specifications): 6.3-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி எச்டிஆர் டிஸ்பிளே (OLED HDR display) உடன் கூகுள் பிக்சல் 10ஏ போன் வெளிவந்துள்ளது. மேலும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

சாரே கொல மாஸ்.. அறிமுகமானது புது கூகுள் 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படை கொண்டு இந்த புதிய பிக்சல் போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனுக்கு 7 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

48எம்பி மெயின் கேமரா (f/1.7) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த போனின் ரியர் கேமராக்கள் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த புதிய பிக்சல் போன் வெளிவந்துள்ளது.

கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) பிராசஸர் உடன் கூகுள் பிக்சல் 10ஏ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 security chip) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5100mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 10W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 2 மைக்ரோபோன்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) இந்த போனில் உள்ளது.

சாரே கொல மாஸ்.. அறிமுகமானது புது கூகுள் 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், வைஃபை 6இ 802.11 ஏஎக்ஸ், என்எப்சி, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), நாவிக் (NavIC), ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 183 கிராம் ஆகும். அப்சிடியன் (Obsidian), ஃபாக் (Fog), லாவெண்டர் (Lavender) மற்றும் பெர்ரி (Berry) நிறங்களில் பிக்சல் 10ஏ போனை வாங்க முடியும்.

கூகுள் பிக்சல் 10ஏ விலை: 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 10ஏ போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. தற்போது கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த போன் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. வரும் மார்ச் 6-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Google Pixel 10a launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X