நாங்களும் ஆட்டத்துக்கு வரலாமா.. Google-ன் புது பட்ஜெட் போன்.. Tensor G4 சிப், டூயல் கேமரா, 7 வருட OS அப்டேட்!
ரூ.60,000 க்கு மேல் என்கிற பட்ஜெட்டில்.. வெறுமனே பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து கொண்டிருந்தால் "வேலைக்கு ஆகாது" என்பதை கூகுள் நிறுவனம் ஏற்கனவே புரிந்து கொண்டதன் விளைவாகவே பிக்சல் 9ஏ (Pixel 9a) போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு.. நல்ல வரவேற்பையும் பெறுகின்றன.
அந்த வரிசையில் பிக்சல் 10ஏ (Pixel 10a) ஸ்மார்ட்போன் ஆனது "கூகுள் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக" இருக்க போகிறது. தற்போது உருவாக்கத்தில் உள்ள இந்த கூகுள் ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் சில முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

டிப்ஸ்டர் ஒன்லீக்ஸ் உடன் இணைந்து ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிக்சல் 10ஏ ஆனது பிக்சல் 9ஏ மாடலில் நாம் பார்த்த அதே வடிவமைப்பை கொண்டிருக்கும். அதாவது ஃப்ளஷ் கேமரா யூனிட் உடன் கூடிய பிளாஸ்டிக் பேக் பேனலை கொண்டிருக்கும்.
மேலும் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சைஸ் ஆனது பிக்சல் 9ஏ மாடலை போலவே 6.2-இன்ச் ஆக இருக்கும். பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் செட் செய்யப்படும். பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் எல்லா பக்கங்களிலும் ஆண்டெனா பேண்டுகள் இயங்கும். மேல் மற்றும் கீழ் பகுதியில் மைக்ரோஃபோன்களுக்கான ஹோல் இருக்கலாம்.
பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக வெளியான சில லீக்ஸ் இது பிக்சல்9ஏ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட அதே டென்சர் ஜி4 சிப்செட்டால் இயக்கப்படலாம் என்று கூறுகிறது. இருப்பினும், இது சற்று அதிக க்ளாக் ஸ்பீட் உடன், டென்சர் ஜி4 சிப்செட்டின் "பூஸ்டட்" வேரியண்ட் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது அதே UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை பயன்படுத்துவதாகவும், பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை (Peak Brightness) ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 7 ஆண்டுகளான சாஃப்ட்வேர் அப்டேட்டை (Software Update) பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆக அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால், விலையும் ஒரே மாதிரியாக இருக்கும். பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,000 க்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (பிஓஎல்இடி) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஓஐஎஸ், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர்)
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4கே/60எப்பிஎஸ் வரை ரெக்கார்டிங் (இது 5எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங்)
- செல்பீ கேமராவில் 4கே/30எப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்
- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240எப்பிஎஸ்), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்


Click it and Unblock the Notifications








