சம்பவக்காரன் சுந்தர்.. Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL அறிமுகம்.. இந்திய விலை விவரங்கள்!
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களாக பிக்சல் 10 சீரிஸ் (Pixel 10 Series) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் பிக்சல் 10 (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) என மொத்தம் 4 மாடல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் இந்த 4 புதிய பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயங்களை பார்த்து விட்டு, பின்னர் இந்த சீரிஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன கூகுள் பிக்சல் 10 மாடலின் முக்கிய அம்சங்கள், முழு அம்சங்கள் மற்றும் விற்பனை தேதி குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் ககலர்களில் வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய 2 மாடல்களின் அதே 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இவ்விரு மாடல்களும் ஜேட், மூன்ஸ்டோன் மற்றும் அப்சிடியன் கலர்களில் வாங்க கிடைக்கும்
பிக்சல் 10 ப்ரோ மாடல் ஆனது கூடுதலாக போர்சலைன் வேரியண்டிலும் வருகிறது. இந்த அனைத்து கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் கலர்களில் வாங்க கிடைக்கும்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் புல் எச்டி பிளஸ் ஓஎல்இடி சூப்பர் ஆக்சுவா டிஸ்பிளே
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் உடனான இன்-ஹவுஸ் டென்சர் ஜி5 சிப்செட்
- 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா
- பில்ட்-இன் க்யூஐ 2 சார்ஜிங் மேக்நட்கள்
- பிக்சல் ஸ்னாப் மேக்நட் சார்ஜிங் அக்ஸசெரீஸ்கள் உடனான இணக்கம்
- 4,970எம்ஏஎச் பேட்டரி
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டமை (Material You Expressive design system) வழங்குகிறது
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- வெப்ப மேலாண்மைக்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபைi, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு


Click it and Unblock the Notifications








