Home
Mobile

முழுசா ரூ.4000 ஆஃபர்.. OIS கேமரா.. 120X ஜூமிங்.. AMOLED டிஸ்பிளே.. 7 வருட ஓஎஸ் அப்டேட்.. எந்த மாடல்?

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பெற வேண்டும் என்றால், கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போன் பக்காவான ஆப்சனாக இருக்கும். இப்போது பிளிப்கார்ட் தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. விலை தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 6 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.74,999 விலைக்கு இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. மேலும் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே ரூ.70,999 விலைக்கு இந்த பிக்சல் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

முழுசா ரூ.4000 ஆஃபர்.. OIS கேமரா.. 120X ஜூமிங்.. AMOLED டிஸ்பிளே!

கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): பவர்ஃபுல்லான ஹார்ட்வேர் மற்றும் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது 1080 x 2424 பிக்சல்கள் ரெசொலூஷன், FHD+ தரம், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், 422 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி மற்றும் HDR சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளதால், வீடியோக்கள் மற்றும் கேமிங் அனுபவம் சிறப்பாக இருக்கும்.

டிஸ்பிளே பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass Victus 2 வழங்கப்பட்டுள்ளது. பர்பாமென்ஸை பொறுத்தவரை, 3 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கூகுள்‌ டென்சார் ஜி5 (Google Tensor G5) சிப்செட் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உடன் கிடைக்கிறது, 7 ஆண்டுகள் வரை ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கும்.

போட்டோகிராபி பிரியர்களுக்காக, ரியரில் 48MP மெயின் கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 10.8MP டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மெயின் கேமராவில் Samsung GN8 Sensor மற்றும் OIS தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அல்ட்ரா வைடு கேமராவில் Sony IMX712 Sensor பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், Samsung 3J1 சென்சாருடன் வரும் டெலிபோட்டோ கேமரா 20X சூப்பர் ரெஸ் ஜூம் (Super Res Zoom) மற்றும் 120X Digital Zoom வசதியை வழங்குகிறது.

வீடியோ ரெக்கார்டிங் செய்ய 4K Video Recording மற்றும் சினிமாட்டிக்‌ பிளர் (Cinematic Blur) போன்ற மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்காக 10.5MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தியாவில் இருக்கும் கேமரா பிரியர்களுக்கு இந்த பிக்சல் 10 ஸ்மார்ட்போன் பக்கா தேர்வாக இருக்கும்.

பேட்டரி பீச்சர்களை பொறுத்தவரை, 4970mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 29W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Obsidian, Frost, Lemongrass மற்றும் Indigo உள்ளிட்ட கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. சக்திவாய்ந்த செயல்திறன், நீண்டகால அப்டேட்கள், சிறந்த கேமரா மற்றும் பிரீமியம் வடிவமைப்பு ஆகியவற்றால் Google Pixel 10, ஆண்ட்ராய்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் மாடலாக உருவெடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 10 With 8GB RAM Gets Rs 4000 Bank Discount on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X