பின்றானே இவன்.. புது Pixel மாடல்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4970mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?
பிக்சல் பிரியர்கள் மட்டுமல்லாமல், மிட்-பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) போனின் முழு பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அப்கிரேட் செய்யப்பட்ட 50 எம்பி கேமரா, டெலிபோட்டோ லென்ஸ் என்று பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். கீழ்காணும் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமானவை கிடையாது. ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் தளத்தில் கசிந்தவை.
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): இந்த பிக்சல் மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15) கொண்ட கூகுள் டென்சார் ஜி5 3என்எம் (Google Tensor G5 3nm) மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ரவுண்டெட் கார்னர், பிளாட் டிசைன் வருகிறது.
இந்த பிக்சல் போனில் சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 10.5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சார் மற்றும் எல்டிஏஎப் (LDAF) போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதுபோல 13 எம்பி அல்ட்ரா வைடு கிடைக்கிறது.
இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்712 (Sony IMX712) சென்சாரும் மேக்ரோ ஆப்ஷனும் கிடைக்கிறது. மேலும், சாம்சங் 3ஜே1 சென்சார் கொண்ட 10.8எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 5X டெலிபோட்டோ ஜூம், 8X டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சினிமாடிக் பிளர் மற்றும் எச்டிஆர் ரெக்கார்டிங் வருகிறது.

இந்த கூகுள் பிக்சல் 10 போனில் 29W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W கியூஐ2 வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,970mAh பேட்டரி கிடைக்கிறது. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (On-display Fingerprint Sensor) மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது.
கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Google Pixel 10 Series) ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதே தேதியில் ப்ரீ-ஆர்டர் தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் மார்கெட்டில் தகவல்கள் கசிந்துள்ளன. ஏனென்றால், கூகுள் பிக்சல் 9 சீரிஸ் மாடல்களும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் வெளியாகின.
ஆகவே, இந்த தேதியிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் மாடல்கள் குளோபல் மார்கெட்டில் வெளியானாலும், அதே தேதியில் இந்திய மார்கெட்டிலும் வெளியாகும். இதனால், ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு இந்தியாவில் இருக்கும் பிக்சல் பிரியர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். விலை விவரங்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications